ETV Bharat / state

திமுக மருத்துவரணி சார்பில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம்!

author img

By

Published : Nov 3, 2019, 6:27 PM IST

பெரம்பலூர்: திமுக மருத்துவரணி சார்பில் நடைபெற்ற நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாமினை நீலகிரி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா தொடங்கி வைத்தார்.

dmk doctotrs wing dengue awareness program inaugurated by DMK Raja

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலரும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் டெங்குவைத் தடுக்கும் முன்னெச்சரிக்கையாக மக்களுக்கு ஆங்காங்கே நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகிறது.

அதுபோல திமுக மருத்துவரணி சார்பிலும் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம் பெரம்பலூரில் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்வினை நீலகிரி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா தொடங்கி வைத்தார்.

நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசா

இதில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினர்.

இதையும் படிங்க: 'படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா' - தமிழிசையின் மாஸ் ட்வீட்!

Intro:பெரம்பலூரில் தி.மு.க மருத்துவரணி சார்பில் நில வேம்பு குடிநீர் வழங்கும் முகாமினை எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ .இராசா தொடங்கி வைத்தார்.Body:தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.
இதனிடையே பெரம்பலூர் மாவட்ட தி.மு.க மற்றும் மருத்துவரணி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் உழவர் சந்தை அருகில் நில வேம்பு குடிநீர் வழங்கும் முகாமினை முன்னாள் மத்திய அமைச்சரும் , எம்.பியுமான ஆ.இராசா பொது மக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கினார்.Conclusion:இந்த நிகழ்வில் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.