ETV Bharat / state

முன்னாள் அமைச்சரின் ஆடிட்டர் அலுவலகத்திலும் சோதனை

author img

By

Published : Dec 20, 2021, 10:19 AM IST

முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி வீடு உள்பட பல பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது ஆடிட்டர் செந்தில் குமார் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சரின் ஆடிட்டர் அலுவலகத்திலும் சோதனை
முன்னாள் அமைச்சரின் ஆடிட்டர் அலுவலகத்திலும் சோதனை

நாமக்கல்: தமிழ்நாட்டின் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சரும் தற்போதைய குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தங்கமணி வீடு உள்பட 69 இடங்களில் கடந்த 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், மீண்டும் இன்று நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மூன்று இடங்களில் அவருக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர சோதனை

நாமக்கல்லில் ஐந்து இடங்களிலும், பரமத்திவேலூரில் 2 இடங்களிலும் கொல்லிமலையில் 2 இடங்களிலும் பள்ளிபாளையத்தில் ஒரு இடத்திலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடிட்டர் செந்தில் குமார்
ஆடிட்டர் செந்தில் குமார்

குறிப்பாக, பள்ளிபாளையம் காவேரி செல்லும் சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மருமகன் தினேஷ்குமார் ஆகியோருக்கு ஆடிட்டராக உள்ள செந்தில்குமார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் எழிலரசி தலைமையில் ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் இச்சோதனையில் அலுவலகத்தில் உள்ள தங்கமணி சார்ந்த கோப்புகள் பற்றி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆடிட்டர் செந்தில் குமார் அலுவலகம்
ஆடிட்டர் செந்தில் குமார் அலுவலகம்

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு செந்தில் குமார் ஆடிட்டராக இருந்து வருவதாக தெரிகிறது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.