ETV Bharat / state

கமலாலய குளத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

author img

By

Published : Dec 4, 2019, 9:16 PM IST

நாமக்கல் : மலைக்கோட்டையிலிருந்து கமலாலய குளத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Rockford cleaning trash lake
Rockford cleaning trash lake

நாமக்கல் மலைக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலைக்கோட்டையில் உணவுப்பொருட்கள், குளிர்பானங்களின் குப்பைகளை அங்கேயே விட்டு செல்கின்றனர். இந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்ளும்போது குப்பைகளை நாமக்கல் புகழ்பெற்ற கமலாலய குளத்தில் கொட்டுகின்றனர்.

நாமக்கல் மலைக்கோட்டை

மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள கமலாலய குளத்தில் குப்பைகளை கொட்டுவதால் கமலாலய குளம் அசுத்தமடைந்து வருகிறது. நகராட்சி பணியாளர்களின் இந்த செயலால் தூய்மையான இந்த கமலாலய குளம் அசுத்தமடைந்து வருகிறது.

rockford-cleaning-trash-lake
குப்பைகள் நிறைந்து காணப்படும் கமலாலய குளம்

இதனால் குளத்திலிருந்து துர்நாற்றம் ஏற்படுவதோடு குளத்தில் உள்ள மீன்களும் அவ்வபோது செத்துமிதக்கின்றன. இதனை நகராட்சி நிர்வாகம் தலையிட்டு குப்பைகளை கமலாலய குளத்தில் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

நாமக்கல்லில் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை!

Intro:நாமக்கல் மலைக்கோட்டையிலிருந்து கமலாலய குளத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
Body:நாமக்கல் மலைக்கோட்டை நாமக்கல் மாவட்டத்தின் சிறப்பம்சமாகும். நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஏறத்தாழ 136 ஏக்கர் பரப்பளவில் ஒரே கல்லினால் சுமார் 75 மீட்டர்(246 அடி) உயரம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இந்த மலைக்கோட்டையானது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மலைக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலைக்கோட்டையில் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் குப்பைகளை அங்கேயே விட்டு செல்கின்றனர். இந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியினை மேற்கொள்ளம்போது குப்பைகளை நாமக்கல் புகழ்பெற்ற கமலாலய குளத்தில் கொட்டிகின்றனர். மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள கமலாலய குளத்தில் மேலிருந்து குப்பைகளை கொட்டுவதால் கமலாலய குளம் அசுத்தமடைந்து வருகிறது. நகராட்சி பணியாளர்களின் இந்த செயலால் தூய்மையான கமலாலய குளம் அசுத்தமடைந்து வருகிறது. இதனால் குளத்திலிருந்து துர்நாற்றம் ஏற்படுவதோடு குளத்தில் உள்ள மீன்களும் அவ்வபோது செத்துமிதக்கிறது. இதனை நகராட்சி நிர்வாகம் தலையிட்டு குப்பைகளை கமலாலய குளத்தில் கொட்டுவதை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.