ETV Bharat / state

காவல்துறை வாகனம் மோதி இளைஞர் விபத்துக்குள்ளான விவகாரம்: இழப்பீடு கோரி உறவினர்கள் மனு

author img

By

Published : Mar 13, 2021, 8:35 AM IST

நாமக்கல்: காவல் துறை வாகனம் மோதி விபத்துக்குள்ளான இளைஞருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

காவல்துறை வாகனம் மோதி விபத்துக்குள்ளான இளைஞருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள்  நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காவல்துறை வாகனம் மோதி விபத்துக்குள்ளான இளைஞருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் அடுத்த என்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சுதாகர் (26), கூலி வேலை செய்து வருகிறார். இவர் சில நாள்களுக்கு முன்னர் தனது இருச்சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தேர்தல் பணிக்காக துணை ராணுவப் படை வீரர்களை அழைத்து வந்த நாகை மாவட்ட காவல் துறைக்கு சொந்தமான வாகனம், தவறான திசையில் திரும்பி சுதாகர் பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுதாகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது சுதாகர் சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சுதாகரின் உறவினர்கள் நேற்று (மார்ச் 12) நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் விபத்து ஏற்படுத்திய காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தை ஓட்டி வந்த காவலரை உடனடியாகக் கைது செய்து, சுதாகருக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நல்ல ஆட்சியை மலரச் செய்வது தான் மாற்றம்: சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.