ETV Bharat / state

வந்ததும் அதிரடிகாட்டும் நாமக்கல் ஆட்சியர் மெகராஜ்...!

author img

By

Published : Sep 25, 2019, 2:03 PM IST

நாமக்கல்: பொதுமக்கள் 24 மணி நேரமும் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என புதிதாக பொறுப்பேற்றுள்ள நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

namakkal

நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மெகராஜ் இன்று பதவியேறுள்ளார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உள்ளிட்டோர் பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாமக்கல் மாவட்ட மக்களே உழைப்பாளர்கள். அவர்கள் செயலே அரசு அலுவலர்களை ஊக்கப்படுத்தி பணிகளை சிறப்பாகச் செய்ய உதாரணமாக இருக்க வேண்டும். 2004 ஆம் ஆண்டு நாமக்கல்லில் நான் திட்ட அலுவலராக பணியாற்றியிருக்கிறேன்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பயிற்சி பெற்று, வேலூர் மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணியாற்றியுள்ளேன். இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சியர் மெகராஜ்

நாமக்கல் மாவட்ட மக்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு பேசினார்.

இதையும் படிங்க:

'பொது பிரச்னைகளுக்கு மக்கள் எந்த நேரமும் அணுகலாம்' - புதிய மாவட்ட ஆட்சியர் தகவல்!

Intro:நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சியராக மெகராஜ் பதவியேற்பு.. பொதுமக்கள் தங்கள் குறைகளை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். புதிய ஆட்சியர் மெகராஜ் 



Body:நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சியராக மெகராஜ் பதவியேற்பு.. பொதுமக்கள் தங்கள் குறைகளை எந்த நேரமும் தெரிவிக்கலாம். புதிய ஆட்சியர் மெகராஜ்  தெரிவித்தார்


நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நாமக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஆசியா மரியத்திடமிருந்து பொறுப்புகளை  புதிய மாவட்ட ஆட்சியர் மெகராஜ் பெற்று  பொறுப்பேற்றுக்கொண்டார்.அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். 


இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சியர் மெகராஜ்  "நாமக்கல் மாவட்ட மக்கள் உழைப்பாளர்கள் . அவர்கள் செயலே அரசு அலுவலர்களை ஊக்கப்படுத்தி பணிகளை சிறப்பாக செய்ய உதாரணமாக இருக்கும். எவ்வாறு உழைப்பது என நாமக்கல் மாவட்ட மக்களிடம் தான் கற்க வேண்டும் எனவும் கடந்த 2004 ம்  ஆண்டு நாமக்கல்லில் திட்ட அலுவலராக பணியாற்றியதாகவும் பிற மாவட்டங்களில் ஊராட்சி திட்ட இயக்குநராக 10 ஆண்டுகளும்,  ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநராக 8 ஆண்டுகள் பணியாற்றியதாகவும் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பயிற்சி பெற்று, வேலூர் மாவட்டத்தில் சார் ஆட்சியராக் பணியாற்றி வந்ததாகவும். அதனை தொடர்ந்து  இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சியரிடமும். மாவட்ட நிர்வாகத்திடமும் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்".




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.