ETV Bharat / state

மீண்டும் சரிந்த முட்டை விலை

author img

By

Published : Jul 6, 2020, 5:03 PM IST

நாமக்கல்: முட்டை விலை மூன்று நாள்களில் 40 காசுகள் சரிந்து 3 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சரிந்த முட்டை விலை : 3 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை!
Namakkal egg rate

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 50 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைத்து 3 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

ஜூலை 3ஆம் தேதி 3 ரூபாய் 70 காசுகளுக்கு விற்கப்பட்ட முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. 3 நாள்களில் 40 காசுகள் குறைப்பு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில், "வட மாநிலங்களில் ஸ்வரன் பண்டிகை தொடங்கியுள்ளது. அங்குள்ளவர்கள் சைவ உணவிற்கு மாறியதால், முட்டைகள் தொடர்ந்து அதிகளவு தேக்கம் அடைந்து விற்பனை குறைந்து, விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பொதுமுடக்கம் காரணமாக முட்டை விற்பனை கடுமையாக குறைந்து, முட்டை நுகர்வு குறைந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இவ்விலை வரும் நாள்களில் மேலும் சற்று குறைய வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கோழிக்கறி வாங்கினால் மாஸ்க் இலவசம் - கறிக்கடைகாரரின் பலே ஐடியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.