ETV Bharat / state

'பணம் கேட்டால் மூக்கை உடைப்பார்கள், ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்வார்' - முதலமைச்சர் பழனிசாமி

author img

By

Published : Dec 30, 2020, 7:39 PM IST

நாமக்கல்: பரோட்டா கடையில் சாப்பிட்டு விட்டு பணத்தை கேட்டால் மூக்கை உடைப்பார்கள், மறு நாள் ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்வார் என முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார்.

edappadi palanisamy
edappadi palanisamy

"வெற்றி நடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பில் முதலமைச்சர் பழனிசாமி இன்று (டிச.30) இரண்டாம் நாளாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், பின் திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "சேந்தமங்கலம் பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு முன் இருந்த சாலைகளையும் தற்போதுள்ள சாலைகளையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சேந்தமங்கலம் பகுதிக்கு அரசு கலை கல்லூரி, புதிய நீதிமன்றம் கொடுத்துள்ளோம். 295 சாலைகள் 155 கோடியில் சேந்தமங்கலம் பகுதியில் போடப்பட்டுள்ளன.

அதிமுக அரசு மக்களுக்கு செய்தது ஸ்டாலினுக்கு மட்டும் தெரியாது. அவருக்கு ஏழை மக்களை கண்ணுக்கு தெரியாது. அவரது குடும்ப மக்கள் மட்டுமே கண்ணுக்கு தெரியும். திமுகவில் மன்னராட்சி நடந்து வருகிறது. திமுகவினர் கடையில் பொருள் வாங்குவார்கள் பணம் கொடுக்க மாட்டார்கள், பரோட்டா கடையில் சாப்பிட்டு விட்டு பணத்தை கேட்டால் மூக்கை உடைப்பார்கள், மறு நாள் ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்வார்" என விமர்சித்து பேசினார்.

ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்வார்

இதையும் படிங்க: ரஜினி மன உளைச்சலில் இருக்கிறார்:அர்ஜுன மூர்த்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.