ETV Bharat / state

சைகையில் தகவல் அறியும் பிரத்யேக முகக்கவசம் விரைவில் அறிமுகம்!

author img

By

Published : May 15, 2020, 4:52 PM IST

நாமக்கல்: காது கேட்காத, வாய்ப் பேச முடியாத குழந்தைகளுக்கு சைகை மூலமாக தகவல்களைத் தெரிந்து கொள்ளும் விதமாக சிறப்பு முகக்கவசங்கள் தயாராகி வருவதாக அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

அமைச்சர் சரோஜா
அமைச்சர் சரோஜா

நாமக்கல் மாவட்டம், சமூகநலத்துறை அலுவலகத்தின் செயல்பாடுகள், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'சமூக நலத்துறையின் மூலம் செயல்படும் 98 மகளிர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 12 லட்சம் முகக் கவசங்கள் தயாரித்து வழங்கப்பட்டன.

இதேபோல், பள்ளி மாணவர்களுக்கு வழங்க, பள்ளி கல்வித்துறையின் பரிந்துரையில் தற்போது 35 லட்சம் முகக்கவசங்கள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 500 மூன்றாம் பாலினத்தவர்களில் 6 ஆயிரம் பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சைகையில் தகவல் அறியும் பிரத்யேக முகக்கவசம் விரைவில் அறிமுகம்!

மூன்றாம் பாலினத்தவர்கள் தாங்கள் விரும்பும் பாலினத்தை தெரிவித்தால், அதற்கேற்ப அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தைக் குறிப்பிட்டு குடும்ப அட்டைகள் பெற முடியும்.

காது கேட்காத, வாய்ப் பேச முடியாத குழந்தைகளுக்கு எளிதில் சைகை மூலமாக தகவல்களைத் தெரிந்து கொள்ளும் விதமாக, சிறப்பு முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்க 97007 99993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வரும் மே 24ஆம் தேதியில் இருந்து பயன்படுத்தலாம்' என்றார்.

இதையும் படிங்க: பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.