ETV Bharat / state

மூதாட்டிகளே குறி.. பாலியல் வன்கொடுமை செய்யும் சைக்கோ கொலையாளி.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?

author img

By

Published : May 23, 2023, 8:38 PM IST

பள்ளிபாளையம் பகுதிகளில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, நகைகளை திருடி, கொலை செய்துவிட்டு செல்லும் சைக்கோ இளைஞரை பள்ளிபாளையம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

மூதாட்டிகளே குறி! பாலியல் வன்கொடுமை செய்யும் சைக்கோ கொலையாளி! போலீசாரிடம் சிக்கியது எப்படி?

நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாவாயி என்ற மூதாட்டி. இவர் கடந்த மார்ச் மாதம் கரும்பு காட்டில் கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அத்துடன், அவர் அணிந்திருந்த 12 சவரன் தங்க நகைகளும் கொள்ளை போனது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிபாளையம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற பதட்டம் ஓய்வதற்குள் அடுத்த தினங்களுக்குள்ளாக மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. கடந்த 12ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பழனியம்மாள் என்ற மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததுடன் அவர் அணிந்திருந்த தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: ஆடு மேய்க்க சென்ற பெண் சடலமாக மீட்பு.. வட மாநில தொழிலாளர்கள் மீது புகார்.. நாமக்கல் போலீசார் விசாரணை!

இந்த இருகொலைகளும் ஒரே மாதிரியாக இருந்ததால் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (மே 23) அதிகாலை பள்ளிபாளையம் எஸ்பிபி காலனி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து காவல் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை.. 17 வயது சிறுவன் கைது!

விசாரணையில் அவர் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த 'செல்வம்' என்பது தெரியவந்தது. மேலும், இவரே இரு மூதாட்டிகளையும் பாலியல் வன்புணர்வு செய்து நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அந்த இளைஞர், மூதாட்டிகளை மட்டும் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் போக்கை கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து பள்ளிபாளையம் காவல் துறையினர் இந்த இளைஞரை கைது செய்து குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இவ்வாறு ஆடு மேய்க்கச் செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை திருடிச் செல்லும் சைக்கோ கொலையாளியை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓட ஓட வெட்டி படுகொலை.. செங்கல்பட்டு அருகே நடந்த பயங்கரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.