ETV Bharat / state

நாமக்கல் 108 விரைவு ஊர்தி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jan 5, 2021, 6:19 AM IST

ஜீவிகே – ஈ.எம்.ஆர்.ஐ நிர்வாகத்தை கண்டித்து நாமக்கலில் 108 விரைவு ஊர்தி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

108 ambulance workers protest
108 ambulance workers protest

நாமக்கல்: நாமக்கல் பூங்கா சாலையில் 108 விரைவு ஊர்தி ஊழியர்கள் தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆப்பாட்டதிற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

விரைவு ஊர்தி ஊழியர்களின் சம்பளத்தை கையாடல் செய்வது, தவறு செய்யும் உயர் அலுவலர்களை அம்பலபடுத்திய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அலுவலர்களைக் கண்டித்தும், சம்பள உயர்வு, அரசு வழங்கும் ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆப்பாட்டத்தின் போது, தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் ஜீவிகே – ஈ.எம்.ஆர்.ஐ நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கோவை மண்டல 108 விரைவு ஊர்தி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஊழியர்கள் அலட்சியம்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று கிடந்த பெண் சடலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.