ETV Bharat / state

முதலமைச்சர் ஆய்வின்போது பத்திரிகையாளர் மீது பாதுகாவலர்கள் தாக்குதல்!

author img

By

Published : May 31, 2022, 3:35 PM IST

Updated : May 31, 2022, 4:19 PM IST

மயிலாடுதுறையில் அருகே திருக்கடையூரில் ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மீது பாதுகாவலர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் ஆய்வின்போது பத்திரிகையாளர் மீது பாதுகாப்பு காவலர்கள் தாக்குதல்
முதலமைச்சர் ஆய்வின்போது பத்திரிகையாளர் மீது பாதுகாப்பு காவலர்கள் தாக்குதல்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, அனந்தமங்கலம், திருக்கடையூர், நல்லாடை ஆகிய இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி நெல் விதைப்பு மற்றும் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணிகள், இயந்திர குறுவை நடவு ஆகியவற்றை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு நடைபெற்ற பணிகள் குறித்து புகைப்படக் கண்காட்சியும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அவர் ஆய்வுசெய்ய மாவட்ட அளவிலான தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்குத் தடை செய்யும் விதத்தில், நைலான் கயிறு கொண்டு காவல் துறையினரால் தடுக்கப்பட்டனர். ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் முதலமைச்சருடன் வந்திருக்கும் ஊடகத்துறையினர் செய்திகளை எடுத்து சென்னையில் உள்ள செய்தி விளம்பரத்துறை மூலம் அனுப்பி விடுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே அதையும் மீறி புகைப்படம் எடுக்க முயன்ற உள்ளூர் பத்திரிகையாளர்களை காவல் துறை தடுத்தனர். மீறி படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை கீழே தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் ஆய்வின்போது பத்திரிகையாளர் மீது பாதுகாவலர்கள் தாக்குதல்

இதேபோல் ’திமுகவினர் உள்ளே செல்லும்பொழுது, எங்களுக்கு இடம் இல்லையா?’ என்று கூறி பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கபில்சிபிலை தொடர்ந்து காங்கிரஸை விட்டு விலகிய ஹர்திக் பட்டேல்...

Last Updated : May 31, 2022, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.