ETV Bharat / state

டிராக்டர் பேரணி - காவல்துறையினர் தடுப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை!

author img

By

Published : Jan 26, 2021, 10:17 AM IST

மயிலாடுதுறை: டிராக்டர் பேரணி நடத்துவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ள நிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் கலவர காலங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை குறித்த ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.

தடுப்பு நடவடிக்கை ஒத்திகை
Preventive action rehearsal

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய சங்கத்தினர் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தனர். இப்பேரணிக்கு மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட முயல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மயிலாடுதுறை காவேரி நகரில் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சியானது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் நேற்று (ஜன.25) நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபடுவர்கள் டிராக்டர்களில் நகருக்குள் நுழைவது போன்றும், தொடர்ந்து, காவல்துறையினரின் ஒலிப்பெருக்கி அறிவிப்பை மீறி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவது போன்றும், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து, வாகனத்தில் ஏற்றுவது போன்று நடித்துக் காண்பிக்கப்பட்டது.

காவல்துறையினர் ஒத்திகை

இதில், மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பத்ம விருதுகளில் ஜொலிக்கும் தமிழர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.