ETV Bharat / state

புயலில் காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர்!

author img

By

Published : May 30, 2021, 10:38 PM IST

அமைச்சர் மெய்யநாதன்
புயலில் மயமான மீனவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர்

நாகப்பட்டினம் : புயலில் சிக்கி காணாமல் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவரின் வீட்டிற்கு சென்று அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆறுதல் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று (மே 30) ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் தனியார் கல்லூரியில் செயல்பட்டுவரும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த அவர், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், மருத்துவர்கள் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

மேலும், நாகப்பட்டினம் டாடா நகரில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார். அதை தொடர்ந்து, புயலில் சிக்கி மாயமான அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் பிரவீன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினர் முகமது ஷாநவாஸ், திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌவுதமன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: மேலும் குறைந்தது கரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.