ETV Bharat / state

Collector traveled by bus: சுற்றுச்சூழலுடனான ஆட்சியரின் தோழமையும், வேண்டுகோளும் அடடே!

author img

By

Published : Dec 27, 2021, 5:26 PM IST

சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக இரண்டாவது வாரமாக தனது முகாம் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்குப் பேருந்து பயணமாகவும், நடை பயணமாகவும் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா வந்தடைந்தார்.

அரசுப் பேருந்தில் அலுவலகம் வந்த ஆட்சியர்
அரசுப் பேருந்தில் அலுவலகம் வந்த ஆட்சியர்

மயிலாடுதுறை: சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க வாரத்தில் திங்கள்கிழமை ஒருநாள் அரசு அலுவலர்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் சைக்கிள், நடைபயணம் அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா இரண்டாவது வாரமாக இன்று (டிசம்பர் 27) தனது வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்று, அங்கிருந்து அரசுப் பேருந்தில் ஏறி ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார்.

அவர் மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணத்திட்டத்தில் பயணம் செய்தார். பேருந்தில் நின்றுகொண்டே பயணம் செய்த ஆட்சியர், பொதுமக்களிடம் முகக்கவசம் அணிந்து வெளியில் வர வேண்டும் என அறிவுறுத்தினார். கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தொலைவிலுள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு நடை பயணமாகச் சென்றார்.

அரசுப் பேருந்தில் அலுவலகம் வந்த ஆட்சியர்

மாவட்ட ஆட்சியரோடு ஆண் அலுவலர்களும் ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு எடுத்துச் சென்றனர். வாரத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அலுவலர்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: Perarivalan undergoes medical check-up: பரோலில் வந்த பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.