ETV Bharat / state

ரீசார்ஜ் பண்ண வந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞர் கைது!

author img

By

Published : Aug 17, 2020, 3:08 AM IST

Updated : Aug 17, 2020, 3:21 AM IST

மயிலாடுதுறை: செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்த இளம்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாசமாக வீடியோ அனுப்பிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட கிளியனூர் அகரவல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் இதயதுல்லா மகன் முகமது அப்ரீத் (21), இவர் அதே ஊரில் பணப்பரிமாற்றம் (money transfer) மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்திவருகிறார்.

அதே ஊரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 12ஆம் தேதி முகமது அப்ரீத் கடையில் தனது செல்போன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்துள்ளார். அப்போது அப்பெண்ணின் செல்போன் எண்ணைக் குறித்துக்கொண்ட முகமது அப்ரீத், அந்த பெண்ணிடம் செல்போனில் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசியதுடன், அப்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாச வீடியோக்களையும் தொடர்ந்து அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்துக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, பெரம்பூர் காவல் துறையினர் மானபங்கப்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முகமது அப்ரீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கோயிலில் மது அருந்தி இறைச்சி சாப்பிட்ட இருவர் பணியிடை நீக்கம்!

Last Updated : Aug 17, 2020, 3:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.