ETV Bharat / state

காஞ்சி சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார் பாமக வேட்பாளர்!

author img

By

Published : Mar 21, 2021, 12:00 PM IST

மயிலாடுதுறைக்கு வருகைபுரிந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் சித்தமல்லி ஆ. பழனிசாமி அருளாசி பெற்றார்.

காஞ்சி சங்கராச்சாரியாரிடம் ஆசிப் பெற்றார் மயிலாடுதுறை பாமக வேட்பாளர்!
காஞ்சி சங்கராச்சாரியாரிடம் ஆசிப் பெற்றார் மயிலாடுதுறை பாமக வேட்பாளர்!

மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வைத்தியநாதன் என்பவர் தனது வீட்டினை காஞ்சி காமகோடி பீடத்துக்கு மடம் அமைப்பதற்காக வழங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு, யாத்ரி நிவாஸ் என்ற அந்த மடத்தை திறந்து வைத்து பக்தர்களிடையே அருளாசி வழங்கிப் பேசினார். முன்னதாக, மயிலாடுதுறையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு சங்கர வித்யாலயா பள்ளி, காமகோடி சிவாகம பாடசலை ஆகிய இடங்களில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்த மயிலாடுதுறை பாமக வேட்பாளர்!

அப்போது, மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சித்தமல்லி ஆ.பழனிசாமி காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்து, தான் தேர்தலில் வெற்றி பெற ஆசிர்வதிக்க கேட்டுக்கொண்டார். அவருக்கு ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குங்கும பரப்புரை வழங்கி ஆசி கூறினார். அப்போது, அதிமுக நகர செயலாளர் நாஞ்சில் கார்த்தி, பாஜக மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாநில செயலாளர் நாஞ்சில் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க...திமுகவை கலாய்த்த முதலைமைச்சர் முதல் மூதாட்டியிடம் வம்பிழுத்த மன்சூர் அலிகான் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.