ETV Bharat / state

விரைவில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு- ஆளுநர் தமிழிசை

author img

By

Published : Aug 3, 2021, 10:17 AM IST

குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிட்டு விரைவில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆதீன கலை கல்லூரியின் பவளவிழாவின் (75 ஆண்டுகள்) தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வருகை தந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு, தருமபுரம் ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ஆதீனத்தில் நடைபெற்ற விழாவில் ஆதீன 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு இறைமண்

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,’’உண்மையாக, கடுமையாக உழைத்தால் யார் வேண்டுமாலும் ஆளுநராக முடியும் என்பதை இந்து சமயம் எனக்கு சொல்லி கொடுத்தது. உழைக்க வேண்டும், படிக்க வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும் என்பதை இறைவழிபாடுதான் சொல்லிகொடுத்தது.

மாணவிகள் நமது பண்பாட்டையும், கலாசாரத்தையும் பின்பற்றி உண்மையாக உழைத்தால் வாழ்வில் பெரிய இடத்தை அடைவதற்கு பலமாக இருக்கும். சமய தமிழ், ஆன்மீக தமிழ் தழைத்து ஓங்கவேண்டும். தமிழும், சமயமும் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கிறது.

தடுப்பூசி போடுங்க...

இது இறைமண். உலகத்தில் வளர்ந்த நாடுகளால்கூட கரோனாவிற்கு தடுப்பூசி தயாரிக்க முடியாதபோது இந்தியாதான் தயாரித்த தடுப்பூசியை மக்களுக்கு கொடுத்தது என்றால் இந்தியாவும், தமிழ்நாடும் இறைபூமிதானே. நமக்கு தேவையானதை இறைவன் கொடுப்பான்.

கரோனாவிலிருந்து நாம் பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இறைவன் அருள் இருந்தாலும் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து 3ஆவது அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.

பள்ளிகள் திறப்பு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,’’புதுச்சேரி மாநிலத்தில் 50 விழுக்காடு மக்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரித்துள்ளனர். மாணவ, மாணவிகள் வீட்டிலேயே இருப்பதால் அனைவரும் ஆன்லைன் கல்வியை கற்க முடியவில்லை.

ஆசிரியர்கள் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொள்ள வேண்டும். மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்கிறார்கள். ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிட்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். விரைவில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது” என்றார்.

ஆளுநர் தமிழிசை

மேகதாது பிரச்னை

மேகதாது பிரச்னை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆளுநர் என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை. ஆனால் காவிரியானாலும் எந்த நதியின் நீரானாலும் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சரியாக கிடைக்க வேண்டும் என்பதே என்பதே எனது விருப்பம்” என கூறினார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி கோரிய மனு- விளக்கமளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.