ETV Bharat / state

பொங்கல் பண்டிகை : மாயூரநாதர் சுவாமிக்கு 250லி நெய்யில் அபிஷேகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 4:37 PM IST

Mayuranathar Temple: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மயிலாடுதுறை பெரியகோயில் என்று அழைக்கப்படும் மாயூரநாதர் ஆலயத்தில் மாயூரநாதர் சுவாமிக்கும், அம்பாளுக்கும் நெய் அபிஷேகம் செய்யப்பட்டது.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு மாயூரநாதர் சுவாமிக்கு 250லி நெய் அபிஷேகம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாடல் பெற்ற பெரிய கோயில் என்று அழைக்கப்படும் மாயூரநாதர் ஆலயம் அமைந்து உள்ளது. இந்த தலத்தில் தான் சமயகுரவர்களால் தேவாரப் பாடல் பாடப்பெற்றது. இங்கு அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்து, மயில் உரு நீங்கி சாபவிமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது. 160 அடி உயரத்தில் ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் அமையப்பெற்ற ஸ்தலமாகும்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளுடைய இந்த கோயிலில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ 24-வது குருமஹா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளானையின் வண்ணம் மாயூரநாதர் நற்பணி மன்றம் சார்பில் மயூரநாதசுவாமி மற்றும் அபயாம்பிகை அம்பாளுக்கு ஆண்டுதோறும் நெய் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை : தஞ்சை பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்! திராளன பக்தர்கள் சாமி தரிசனம்!

இந்த ஆண்டு 24வது ஆண்டாக நெய் அபிஷேகம் நடைபெற்றது. கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விரதமிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களால் வழங்கப்பட்ட 250 லிட்டர் நெய் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சோடச தீபாராதனை மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்று அபிஷேகம் செய்யப்பட்ட நெய், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: பூலோக வைகுண்டத்தில் தைப்பொங்கல் தேரோட்ட திருவிழா கோலாகலம்! பக்தர்கள் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.