ETV Bharat / state

நீதிமன்ற தீர்ப்பையும் மீறி பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மீனவர் புகார்!

author img

By

Published : Aug 15, 2023, 11:12 PM IST

மீனவர் கிராமத்தில் நீதிமன்றத்தில் விவகாரத்து பெற்ற நிலையில் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க பஞ்சாயத்தார்கள் உத்தரவு பிறப்பித்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக மீனவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

Etv Bharat
Etv Bharat

நீதிமன்ற தீர்ப்பையும் மீறி பஞ்சாயத்தார்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக மீனவர் புகார்

மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா கீழமூவர்க்கரை மெயின்ரோட்டை சேர்ந்தவர் மீனவர் மூர்த்தி (58). இவர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கீழமூவர்க்கரை மீனவ பஞ்சாயத்தார்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் மகா பாரதியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் "கீழமூவர்க்கரை கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தனது மூத்த மகன் அன்பரசனுக்கும் வாணகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த பிரசாந்தி என்பவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்து உள்ளார். அதன் பிறகு தனது மகன் மடவாமேடு கிராமத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

அதன் பிறகு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற போது சம்பாதித்த பணத்தை மருமகளுக்கு கொடுத்தார். தற்போது கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தனது மகன் விவாகரத்து கேட்டு சீர்காழி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தீர்ப்பாகி உள்ளது.

இந்நிலையில் எனது மருகளுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று ஊர் பஞ்சாயத்தார்கள் கூறினர். அதற்கான வசதி இல்லை என்று கூறியதால் பஞ்சாயத்தார்கள் எனது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் கடந்த 4 மாதங்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாததால் எனது குடும்பத்தினர் சாப்பாட்டிற்கே வழியின்றி தவித்து வருகிறோம்.

ஊரை விட்டு விலக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: Independence Day 2023: "நேஷன் ஃபர்ஸ்ட்.. ஆல்வேஸ் ஃபர்ஸ்ட்" - புதுவிதமாக தேசப்பற்றை வெளிப்படுத்திய குழந்தைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.