ETV Bharat / state

பழக்கடையில் பழம் வாங்க சென்ற பாடிபில்டர்களால் கைகலப்பு; போலீசார் விசாரணை

author img

By

Published : Jun 27, 2023, 11:31 AM IST

மயிலாடுதுறையில் பழக்கடையில் பழம் வாங்கச் சென்ற பாடிபில்டர்கள், கடைக்காரர் மீது தாக்குதல் நடத்தி மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி தப்பியுள்ளனர். இதனால், தப்பிச் சென்றவர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழக்கடையில் பழம் வாங்க சென்ற பாடிபில்டர்களால் கைகலப்பு;
பழக்கடையில் பழம் வாங்க சென்ற பாடிபில்டர்களால் கைகலப்பு;

பழக்கடையில் பழம் வாங்க சென்ற பாடிபில்டர்களால் கைகலப்பு

மயிலாடுதுறை: செம்பனார் கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட கருவிழந்தநாதபுரம் மெயின் ரோட்டில் பழக்கடை நடத்தி வருபவர் துரை (வயது 75). இவர் கடைக்கு காரைக்காலில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த தமிழரசன் (வயது 30), கதிர்வேல் (வயது 21) ஆகிய இருவர் துரையிடம் திராட்சை பழம் கேட்டுள்ளனர்.

அப்போது ஒரு கிலோ 120 ரூபாய் என்று துரை கூறியுள்ளார். கால் கிலோ திராட்சை கேட்டு விலை அதிகமாக சொல்வதாகக் கூறி பேரம் பேசி உள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடைக்கு துரையின் மகன் சக்திவேல் (வயது 35) வந்து உள்ளார். இதற்கிடையில் தகராறு கைகலப்பாக மாறியது. அப்போது தங்களை பழக்கடையைச் சேர்ந்தவர்கள் அடிப்பதாக செல்போனில் தமிழரசன், கதிர்வேல் ஆகியோர் கூறியுள்ளனர்.

அதன் பெயரில் காரைக்காலில் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அவ்வழியாக வேனில் பாண்டிச்சேரி சென்ற பாடி பில்டர்கள் 20 பேர், பழக்கடைக்கு வந்து உள்ளனர். அப்போது துரை மற்றும் சக்திவேலை தாக்கி பழக்கடையை சேதப்படுத்தி பழக்கடைக்கு அருகில் இருந்த தமிழ்ச்செல்வி என்பவரின் பெட்டிக்கடையினையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். பின் ரோட்டில் இருந்த வாகனங்களையும் அடித்து உடைத்து விட்டு வேனில் தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சினிமா பாணியில் விரட்டிச் சென்று உள்ளனர். சாலையில் கண்மூடித்தனமாக வேன் சென்றதால் ஆட்டோ உள்ளிட்ட சில வாகனங்களை மோதி சென்றபோது, விரட்டிச் சென்றவர்கள் கற்களை வீசியதில் வேன் கண்ணாடி உடைந்தது. இதனால் பாடிபில்டர்கள் சீர்காழி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனிடையே கருவிழந்தநாதபுரத்தில் இரண்டு கடைகளை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தை அறிந்து வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ் குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். பின், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. பாடி பில்டர்களின் தாக்குதலுக்கு உள்ளான துரை, சக்திவேல் ஆகிய இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினர்.

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக துரை செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டிச்சேரியைச் சேர்ந்த பிரதாப், கர்ணன், தமிழரசன், கதிர்வேல், விக்னேஸ்வரன், பிரதீப்குமார் உள்ளிட்ட பத்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: போதையில் பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் - பள்ளி மாணவனின் அசத்தல் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.