ETV Bharat / state

சீர்காழியில் மீன் உலர் களம் கட்டுவதற்கான பூமி பூஜை!

author img

By

Published : Dec 30, 2020, 10:05 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் மீன் உலர் களம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ பாரதி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

மீன் உலர் களம் கட்டுவதற்கான பூமி பூஜை
மீன் உலர் களம் கட்டுவதற்கான பூமி பூஜை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையாறு மீன்பிடி துறைமுக வளாகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் மீன் உலர் களம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சீர்காழி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் பி.வி.பாரதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, கட்டுமான பணியை தொடங்கிவைத்தார்.

மேலும் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இக்கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறினார். இதில் அரசு அலுவலர்கள், மீனவர்கள், அதிமுகவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: உலக நன்மைக்காக கோயம்புத்தூரில் அரங்கேறிய நூதன திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.