ETV Bharat / state

170 கிலோ கஞ்சா பறிமுதல்

author img

By

Published : Jan 18, 2022, 3:50 PM IST

ஆந்திராவிலிருந்து நாகப்பட்டினம் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

170 kg of cannabis seized by nagappattinam police officers
170 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகப்பட்டினம்: ஆந்திராவிலிருந்து நாகப்பட்டினம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த உள்ளதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நேற்று (ஜன.17) திங்கள்கிழமை அதிகாலை 3:30 அளவில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவலர்கள் வேட்டைக்காரன் புதுப்பள்ளி பாலம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த இடத்தில் மூன்று பேர் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் இரண்டு சொகுசு கார்கள் அங்கு வந்து நின்றது. ஒரு காரில் இருந்து இரண்டு பேர், மற்றொரு காரில் வந்த நான்கு பேர் என மொத்தம் ஒன்பது பேர் அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது தனிப்படை காவலர்கள், ஒன்பது பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர். ஒரு காரில் 85 பொட்டலங்களில் 170 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த காவலர்கள், சம்பந்தப்பட்ட ஒன்பது பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ. 50 லட்சம் எனவும், காரின் மதிப்பு 20 லட்சம் எனவும், கஞ்சாவை வேதாரண்யம் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.