ETV Bharat / state

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் மீது பாய்ந்த போக்சோ!

author img

By

Published : Aug 19, 2020, 3:53 PM IST

மதுரை: நாகமலை புதுக்கோட்டை அருகே 12 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது!
Young man arrested in pocso

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கரடிபட்டியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் காசி (27). இவருக்குச் சமீபத்தில் திருமணமான நிலையில் இவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அவரது தம்பி ஆகியோர் வீட்டின் முன்பு உள்ள ட்ரை சைக்கிளில் நேற்றிரவு தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் வந்த காசி, அந்தச் சிறுமியை ட்ரை சைக்கிளோடு கீழக்குயில்குடி மலைப் பகுதிக்கு கொண்டுசென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் தம்பி காசியிடமிருந்து தப்பியோடி இது குறித்து பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற பெற்றோர், அப்பகுதி மக்கள், காசியைப் பிடித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காசியை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.