ETV Bharat / state

'எங்க கிராமத்தில் சரக்கு விற்பனை செய்றாங்க' சொல்லிப்பார்த்தோம் கேட்கல - கிராம மக்கள் திடீர் போராட்டம்!

author img

By

Published : Mar 30, 2020, 9:57 PM IST

மதுரை: கிராமத்தில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை
மதுரை

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி பலர் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர்.

திருட்டுத்தனமாக மதுபான விற்பனையும் அரங்கேறிவருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் புல்லமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் தனது வீட்டுத் தோட்டத்தில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கிராம மக்கள் அவரை கண்டித்தும் விற்பனையை தொடர்ந்து செய்துள்ளார். தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராமத்திற்குள் வந்து மது பாட்டில் வாங்கி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

வெளியூர் மக்கள் தங்கள் ஊருக்குள் வருவதால் கரோனா பரவும் அச்சம் நிலவுவதால் காவல் துறையிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.

கிராம மக்களின் திடீர் போராட்டம்

இதைத்தொடர்ந்து, தற்போது கிராம மக்கள் திடீரென்று சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பொது இடத்தில் கூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கிராம மக்களிடம் சமாதானம் பேசினர். விற்பனை செய்யும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: டிக் டாக் பதிவிட்ட கரோனா நோயாளி : ஒரே நாளில் 4 சோக கீதங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.