ETV Bharat / state

ஸ்டெர்லைட் வழக்கில் காணொலி காட்சி மூலம் விசாரணை

author img

By

Published : Oct 4, 2019, 10:11 PM IST

மதுரை: நீதிபதி சிவஞானம் தலைமையில் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் அனைவரும் ஆஜராகவேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

sterlite case investigation on going on video conferencing

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, போராட்டகாரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு, ஸ்டெர்லைட் ஆலை மூடவேண்டி கோரிக்கை உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் வழக்குகள் அனைத்தையும் விசாரித்துவந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி சிவஞானம் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நிர்வாக நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வே தொடர்ந்து ஸ்டெர்லைட் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் மாசிலாமணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிவஞானம், ஸ்டெர்லைட் தொடர்பானவரும், ஸ்டெர்லைட் சம்பந்தமான அனைத்து வழக்குதாரர்களும் காணொலி காட்சி மூலம் 15ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளார். மேலும், அன்றைய தினமே, முறையீடு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் வழக்கு மீண்டும் விசாரணை: ஹென்றி தகவல்

Intro:ஸ்டெர்லைட் வழக்கில் வீடியோ கான்பரன்சிங் விசாரணைக்கு ஆஜராக வழங்குவார்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் குறித்த வழக்குகள் அனைத்தையும் ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வே தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் மாசிலாமணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு.Body:ஸ்டெர்லைட் வழக்கில் வீடியோ கான்பரன்சிங் விசாரணைக்கு ஆஜராக வழங்குவார்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் குறித்த வழக்குகள் அனைத்தையும் ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வே தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் மாசிலாமணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு.

வரும் 15ம் தேதி ஸ்டெர்லைட் சம்பந்தமான அனைத்து வழக்குதாரர்களும் வீடியோ கான்பரன்சிங் விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவு.

அன்றைக்கே இது பற்றி முடிவு எடுக்கலாம் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி சிவஞானம் அறிவிப்பு.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராட்டம், போராட்டகாரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு, ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஆகியவை சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில் அந்த வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டு ஸ்டைர்லைட் சம்பந்தமான வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு கடந்த சில மாதங்களாக விசாரித்து வந்தது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி சிவஞானம் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நிர்வாக நீதிபதியாக பணி மாறுதல் செய்யப்பட்டார்,அதனை தொடர்ந்து இன்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக வழக்கறிஞர் மாசிலாமணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிர்வாக நீதிபதி சிவஞானம் முன்பு ஸ்டெர்லைட் சம்பந்தமான வழக்குகளை ஏற்கனவே விசாரித்த நீங்களே விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்,

அந்த முறையீட்டை கேட்டு கொண்ட நீதிபதி, அக்டோபர் 15ம் தேதி வீடியோ கான்பரன்சிங் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பித்து அன்றைய தேதியில் ஸ்டெர்லைட் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குதாரர்களையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு அன்றைய விசாரணையில் இந்த முறையீடு சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.