ETV Bharat / state

southern railway: மதுரை - குஜராத் இடையே 10 நாட்கள் சிறப்பு ரயில்: எதுக்காக தெரியுமா?

author img

By

Published : Apr 12, 2023, 1:46 PM IST

Updated : Apr 12, 2023, 4:12 PM IST

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்வை முன்னிட்டு குஜராத் மாநிலத்திலுள்ள வெரவல் ரயில் நிலையத்திற்கு மதுரையிலிருந்து ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

special train on Madurai to Gujarat
மதுரை - குஜராத் 10 நாட்கள் சிறப்பு ரயில்

மதுரை: குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன் முதல் ரயில் மதுரையிலிருந்து ஏப்ரல் 14-ஆம் தேதி மாலை 5.40 மணிக்குப் புறப்பட்டு 17-ஆம் தேதி காலை 9 மணிக்குக் குஜராத் மாநிலம் வெரவல் ரயில் நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ரயில் சேவை ஏப்ரல் 15, 16, 17, 18, 19, 20, 21, 22 மற்றும் 23-ஆம் தேதி வரை உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பிட்ட நாட்களில் மாலை 5.40 மணிக்குப் புறப்பட்டு, 4-ஆவது நாளில் காலை 7.30 மணிக்கு வெரவேல் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், சென்னை, ரேணிகுண்டா, கச்சிகுடா, பூமா, அகோலா, ஜல்காவோன், நந்தூர்புர், சூரத், வடோதரா, அகமதாபாத், சுரேந்திரநகர், ராஜ்கோட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 6 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 4 மற்றும் 2-ஆம் வகுப்பு பொதுப்பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்படும். தற்போது இதற்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது ஆகையால் விரைந்துடுங்கள என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பாக அதிக நாள் பயணமாக வேறு மாநிலங்களுக்குச் செல்லும் ரயில் சேவை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும். ஆனால் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்வை முன்னிட்டு இயக்கப்படும் இந்த ரயில் சேவை 10 நாட்களுமே உள்ளது ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா புகைத்து, கத்தியுடன் இன்ஸ்டாவில் வீடியோ பதிவு செய்த இளைஞர் கைது!

Last Updated :Apr 12, 2023, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.