ETV Bharat / state

தூத்துக்குடியில் ரயில்வே சுரங்கப்பாதை பணி.. ரயில் சேவையில் மாற்றம்

author img

By

Published : Jun 11, 2023, 8:28 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் ரயில்வே சுரங்கப் பாதைப் பணிகள் நடைபெறுகின்ற காரணத்தால் தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென் மாவட்ட இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது
தென் மாவட்ட இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் யார்டு பகுதியில் வருகிற ஜூன் 13ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் தெற்கு ரயில்வே, ரயில் சேவைகளில் மாற்றம் செய்து உள்ளது.

ரயில் சேவை பகுதியாக ரத்து

  • ஈரோடு - திருநெல்வேலி செல்லக்கூடிய விரைவு ரயில் (வண்டி எண் 16845) 12.06.23 அன்று, திண்டுக்கல் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து.
  • திருநெல்வேலி - ஈரோடு செல்லக்கூடிய விரைவு ரயில் (வண்டி எண் 16846) 13.06.23 அன்று, திருநெல்வேலி - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து.
  • கோயம்புத்தூர் - நாகர்கோவில் சந்திப்பு செல்லக்கூடிய விரைவு ரயில் (வண்டி எண் 16322) 13.06.23 அன்று, திண்டுக்கல் - நாகர்கோவில் சந்திப்பு இடையே பகுதி ரத்து.
  • நாகர்கோவில் சந்திப்பு - கோயம்புத்தூர் செல்லக்கூடிய விரைவு ரயில் (வண்டி எண் 16321) 13.06.23 அன்று, நாகர்கோவில்-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து.
  • பாலக்காடு சந்திப்பு - திருச்செந்தூர் செல்லக்கூடிய விரைவு ரயில் (வண்டி எண் 16731) 13.06.23 அன்று, திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து.
  • திருச்செந்தூர் - பாலக்காடு சந்திப்பு செல்லக்கூடிய விரைவு ரயில் (வண்டி எண் 16732) 13.06.23 அன்று, திருச்செந்தூர் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து.
  • திருச்சி- திருவனந்தபுரம் செல்லக்கூடிய விரைவு ரயில் (வண்டி எண் 22627) 13.06.23 அன்று, விருதுநகர் - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து.
  • திருவனந்தபுரம் - திருச்சி செல்லக்கூடிய விரைவு ரயில் (வண்டி எண் 22628) 13.06.23 அன்று, திருவனந்தபுரம் - விருதுநகர் இடையே பகுதியாக ரத்து.
  • மைசூர் - தூத்துக்குடி செல்லக்கூடிய விரைவு ரயில் 12.06.23 (வண்டி எண் 16236) அன்று, விருதுநகர் - தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து.
  • தூத்துக்குடி - மைசூர் செல்லக்கூடிய விரைவு ரயில் 13.06.23 (வண்டி எண் 16235) அன்று, தூத்துக்குடி - விருதுநகர் இடையே பகுதியாக ரத்து.
  • தாம்பரம் - நாகர்கோவில் செல்லக்கூடிய விரைவு ரயில் (வண்டி எண் 20691) 12.06.23 அன்று, திருச்சி - நாகர்கோவில் சந்திப்பு இடையே பகுதியாக ரத்து.
  • நாகர்கோவில் - தாம்பரம் செல்லக்கூடிய விரைவு ரயில் (வண்டி எண் 20692) 13.06.23 அன்று, நாகர்கோவில் - திருச்சி இடையே பகுதியாக ரத்து.

ரயில் சேவை பாதையில் மாற்றம்:

  • குருவாயூர் - சென்னை எழும்பூர் செல்லக்கூடிய விரைவு ரயில் (வண்டி எண் 16128) 12.06.23 அன்று, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் வழியாக சென்னை எழும்பூர் சென்றடையும்.
  • நாகர்கோவில் சந்திப்பு - மும்பை சிஎஸ்எம்டி (CSMT) செல்லக்கூடிய விரைவு ரயில் (வண்டி எண் 16340) 13.06.2023 அன்று திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் வழியாக மும்பை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: TN School Saturday:'இனி சனிக்கிழமைகளில் பள்ளிக்கூடம் நடக்கும்' - பள்ளி மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.