ETV Bharat / state

’ரஜினிக்கு விருது அளிப்பது அவரது ரசிகராக மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது’ - செல்லூர் ராஜு

author img

By

Published : Nov 3, 2019, 9:00 PM IST

மதுரை: நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது வழங்கி இருப்பது அவரின் ரசிகராக தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

sellur-raju-

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களைச் சந்திந்தார். அப்போது பேசிய அவர், ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசு அறிவித்திருப்பது அவரது ரசிகராக இருக்கிற காரணத்தால் தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல், இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் எல்லாம் அரசியலுக்காக தானே தவிர உண்மை அல்ல என்று குறிப்பிட்ட அவர், வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள் முழுமையான வெற்றிபெறுவோம் என்றும், அதில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, இடைத்தேர்தலில் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றிபெறவைத்துள்ளதாகவும், வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் தங்களுக்கு வெற்றி அளிப்பார்கள் என்பதில் மாற்றமில்லை என்றும் தெரிவித்தார்.

செல்லூர் ராஜு, கூட்டுறவுத் துறை அமைச்சர்

மேலும், அமைச்சர்கள் மாற்றம் என்பது முதலமைச்சரின் கையில் உள்ளதாகவும், அவர் எப்போது நினைத்தாலும் அமைச்சர்களை மாற்றிவிடக்கூடிய அதிகாரம் அவரிடம் இருப்பதாகவும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

இதையும் படிங்க:நண்பன் சூர்யாவுக்கு (ரஜினி) விருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது’ - ’தேவா’ ஜெயக்குமார் வாழ்த்து

Intro:மதுரை தன் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூBody:மதுரை தன் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ

*நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி இருப்பது மன மகிழ்ச்சி அளிக்கிறது அவரின் ரசிகராக இருக்கிற காரணத்தினால் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியாக உள்ளது*

கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடுகளை முதலில் கண்டுபிடித்தது நாங்கள்தான்

முதலில் புகார் அளித்தோம் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்

இதுபோல விரும்பத்தகாத சம்பவங்கள் யார் நடந்தாலும் கட்சிகளை சேர்ந்தவர் களாக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

யாருக்கும் எந்த பாரபட்சமின்றி தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

ஸ்டாலின் இடைத்தேர்தல் குறித்து சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் எல்லாம் அரசியலுக்காக தானே தவிர உண்மை அல்ல

வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள் முழுமையான வெற்றி பெறுவோம்

அதில் எந்தவித மாற்றமும் இல்லை பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள் என்றால் முதலில் திருமங்கலத்தில் திமுக தான் அந்த வேலையை செய்தது

நாங்கள் இதுவரை அந்த மாதிரியான வேலைகளை செய்தது கிடையாது

மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்துள்ளனர்

வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் எங்களுக்கு வெற்றி அளிப்பார்கள் என்பதில் மாற்றமில்லை

அமைச்சர்கள் மாற்றம் என்பதே முதலமைச்சரின் கையில் உள்ளது
.
அவர் எப்போது நினைத்தாலும் அமைச்சர்களை மாற்றிவிடக்கூடிய அதிகாரம் அவரிடம் உள்ளது

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சர்களை மாற்றியது கிடையாது ஒருவர் மீது தவறு இருக்கிற பட்சத்தில் அதை முழுமையாக ஆராய்ந்து அதற்கு அடுத்தபடியாகத்தான் அந்த அமைச்சர் பதவியிலிருந்து அவரை இறக்கி விடுவார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.