ETV Bharat / state

’நண்பன் சூர்யாவுக்கு (ரஜினி) விருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது’ - ’தேவா’ ஜெயக்குமார் வாழ்த்து

author img

By

Published : Nov 2, 2019, 10:04 PM IST

சென்னை: நண்பன் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Minister Jeyakumar happy to Rajinikanth honored lifetime acheivement award

சென்னை போரூரில் செயல்பட்டுவரும் அகர்வால் தனியார் கண் சிகிச்சை மருத்துவமனையில், உலர் கண் சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பம் கொண்ட மருத்துவக் கருவி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மருத்துவக் கருவியை அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு கலந்துரையாடல் மூலம் அவர் பதிலளித்தார்.

அப்போது அவர், ”அரபிக்கடலில் சிக்கியுள்ள மீனவர்கள் பெங்களூரு விமானப்படை, கப்பற்படை ஆகியோரின் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டு மகாராஷ்டிரா, கோவா ஆகிய பகுதிகளில் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அவர்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள். மேலும் ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த வரைவு அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து எவ்வித பதற்றமும் மாணவர்கள் அடையத் தேவையில்லை” என்றார்.

செய்தியாளர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் ஜெயக்குமார்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களின் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசின் சார்பாக போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது குறித்து நீதிமன்றத்திடம் கருத்துகளை கேட்க வேண்டும் எனவும் அரசு யாருக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் தனது நண்பர் ரஜினிக்கு திரையுலகின் உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும் அவர் பல்வேறு விருதுகளை பெறவேண்டுமெனவும் அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க:சூப்பர் ஸ்டாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு

Intro:


Body:சென்னை போரூரில் செயல்பட்டுவரும் அகர்வால் தனியார் கண் சிகிச்சை மருத்துவமனைகள் உலர் கண் சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பம் கொண்ட மருத்துவ கருவி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு மருத்துவம் கருவியை அறிமுகம் செய்து வைத்தார் இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு கலந்துரையாடல் மூலம் பதிலளித்தார்


Conclusion:அரபிக்கடலில் சிக்கியுள்ள மீனவர்கள் பெங்களூர் விமானப்படை கப்பற்படை ஆகிய அமைப்புகளில் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ரோந்து பணிகளில் கடலில் சிக்கிய ஆறு படகு மீனவர்களை பத்திரமாக அருகே உள்ள மகாராஷ்டிரா கோவா போன்ற பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர் இன்னும் ஓரிரு நாட்களில் மீனவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு குறித்த வரைவு அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து எந்தவித பதற்றமும் அடைய தேவையில்லை என கருத்து தெரிவித்தார் மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து கேள்விக்கு தமிழக அரசின் சார்பாக அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு குண்டர் சட்டம் போடப்பட்டது எனினும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து நீதிமன்றத்திடம் கருத்துக்களை கேட்க வேண்டும் அதிமுக அரசு யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை என கூறியுள்ளார் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற்றுள்ளன யார் யாருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும் தங்களுக்கு தேவையான இடங்களை கேட்பது கூட்டணிக் கட்சியினரின் தர்மம் அதனை அதற்கான குழு பரிசீலனை செய்து இடங்களை ஒதுக்கீடு செய்யும் நண்பன் ரஜினிக்கு திரையுலகின் உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் அவர் பல்வேறு விருதுகளை பெற வேண்டுமென வாழ்த்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.