ETV Bharat / state

’பாத்திமா தற்கொலை விசாரணையில் அரசியல் தலையீடு’ - திருமாவளவன்

author img

By

Published : Nov 16, 2019, 5:52 PM IST

சென்னை: அரசியல் தலையீடு இருப்பதால்தான் ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் சுதர்சனிடம் காவல் துறை விசாரணையை தாமதப்படுத்துகிறதென விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Political interference in Fatima suicide investigation, says thirumavalavan

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதற்கான காரணத்தை யார் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் இதுவரையில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. இவ்வாறான தற்கொலைகள் நடப்பது இது முதல்முறை அல்ல.

சென்னையில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உயர் கல்வி மாணவர்களுக்கு இப்படியான மன உளைச்சல் ஏற்பட்டு, அவர்கள் தற்கொலை செய்வது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும். உயர் கல்வியில் மாணவ மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் துன்புறுத்தல்கள், வன்முறைகள் ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்வதற்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். மேலும் பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் விசிக தலைவர் திருமாவளவன்

பாத்திமாவின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் சுதர்சனிடம் காவல் துறை விசாரணையை தாமதப்படுத்துவது, உள்நோக்கம் கொண்டதாகவும் அரசியல் தலையீடு இருப்பதாகவும் தெரிகிறது. தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்ற பாத்திமாவின் பெற்றோர் நம்பிக்கையை, அவர்களுடைய மகளின் இறப்பு இழக்கச் செய்துள்ளது. இதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெட்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

சபரிமலை விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் அது குறித்து பேசக் கூடாது. பெண்கள் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். சபரிமலை பிரச்சனையின்போது, வழிபாடுக்கு சென்ற பெண்களுக்கு சிறப்பான பாதுகாப்பை கேரள அரசு அளித்தது. அதேபோல, தற்போது முன்பதிவு செய்துள்ள பெண்களுக்கும் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ’பி.எஸ். கிருஷ்ணனின் மறைவு பட்டியிலின மக்களுக்கு பேரிழப்பு’ - திருமாவளவன்

Intro:சபரிமலை பிரச்சினையின் போது பெண்களுக்கு கேரளா அரசு சிறப்பான பாதுகாப்பு அளித்தது - தற்போது முன்பதிவு செய்துள்ள பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி*Body:சபரிமலை பிரச்சினையின் போது பெண்களுக்கு கேரளா அரசு சிறப்பான பாதுகாப்பு அளித்தது - தற்போது முன்பதிவு செய்துள்ள பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி*

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் பேட்டி:

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை யார் என்றும் கூறி இருக்கிறார், ஆனால் இதுவரையில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. இவ்வாறாக நடப்பது முதல் முறை அல்ல.

சென்னையில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உயர்கல்வி மாணவர்களுக்கு இப்படிடயான மன உளைச்சல் ஏற்படுவது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும்.
உயர்கல்வியில் மாணவ மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் துன்புறுத்தல்கள், வன்முறைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது.

மேலும் பாத்திமா தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

*சுதர்சன் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து பெற்றோர் கேள்விக்கு*

சுதர்சன் மீது காவல்துறை விசாரணை இதுவரை நடத்தாததும், தாமதப்படுத்துவது உள்நோக்கம் இருப்பதற்கும், அரசியல் தலையீடு இருப்பதாக தெரிகிறது.

தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்ற நம்பிக்கையில் அவருடைய பெற்றோர்கள் இருந்து வந்த நிலையில் அவருடைய மகளின் இறப்பு ஒட்டுமொத்த தமிழகமும் வெட்கப்படவேண்டிய நிலையில் உள்ளது.

சபரிமலை விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் அது குறித்து பேசக்கூடாது. பெண்கள் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கேரள மாநில அரசு அழகாக சபரிமலை பிரச்சனையின் போது வழிபாடுக்கு சென்ற பெண்களுக்கு பாதுகாப்பை அளித்தது.

இந்நிலையில் தற்போது முன்பதிவு செய்துள்ள பெண்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதனை நான் நம்புகிறேன் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.