ETV Bharat / state

Anbumani Ramadoss: "தேசிய அளவில் மட்டுமே கூட்டணி; தமிழ்நாட்டில் இல்லை" - NDA- கூட்டணி குறித்து மனம் திறந்த அன்புமணி!

author img

By

Published : Aug 5, 2023, 11:16 AM IST

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை என்றும் தேசிய அளவில் மட்டுமே கூட்டணியில் உள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை
madurai

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

மதுரை: நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள 18 பாட்டாளி மக்கள் கட்சியினரை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மண்ணுக்கும், மக்களுக்குமாக போராடிய பாமக-வை சேர்ந்த 55 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பாமகவினரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

என்.எல்.சிக்காக தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த கூடாது. என்.எல்.சி நிலக்கரி எடுத்த பின்னர் நிலங்களை அழித்து வருகிறது. தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என முதலமைச்சர் 3 மாதங்களுக்கு முன் அறிவித்தார். ஆனால் தற்போது மூன்று போகம் விளையும் விளை நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. என்.எல்.சி 3-ஆம் சுரங்கம் அமையுமா அல்லது அமையாதா? என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: மாநிலம் முழுவதும் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் அமுதா அதிரடி!

தொடர்ந்து பேசிய அவர், என்.எல்.சியின் பிரச்சனை தமிழக மக்களின் பிரச்சனை, விளை நிலங்களை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. என்.எல்.சி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது என்றார்.

மேலும், ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அவதூறு வழக்கில் வழங்கிய தீர்ப்பு குறித்த செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு? பதிலளித்த அன்புமணி ராமதாஸ், ராகுல்காந்திக்கு கிடைத்தது மிகப்பெரிய தண்டனை. சாதாரண வழக்கில் ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது. ராகுல்காந்தி வழக்கில் தீர்ப்பின் விபரம் தெரியவில்லை. தீர்ப்பின் விபரம் கிடைத்தவுடன் முழுமையாக பேசுகிறேன். ராகுல்காந்தி வழக்குக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை.

இதையும் படிங்க: கைம்பெண் நுழைந்தால் கோயில் புனிதம் கெட்டுவிடுமா? நாகரீக உலகில் இதெல்லாம் என்ன கொடுமை..! - உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை

டெல்லியில் (தேசிய ஜனநாயக கூட்டணியில்) NDA- கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை. 2026-இல் பாமக ஒருமித்த கருத்துடைய கட்சிகளோடு தேர்தலை சந்திக்கும். அமலாக்கத்துத்துறை சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, சிறைக்குள் செல்லும் பொழுது பாமகவின் பொருளாளர் திலகபாமா உள்ளே அனுமதிக்கப்படாததைக் கண்டித்து போலீசாருடன் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறை வாசலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: நிஃப்டி உயர்வு: 14 சதவீதம் வரை உயர்ந்த zomato-வின் பங்குகள்: பங்குதாரர்களுக்கு கடிதம் எழுதிய CEO!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.