ETV Bharat / state

ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - பழனிவேல் தியாகராஜன் வரவேற்பு

author img

By

Published : May 20, 2022, 7:36 AM IST

Updated : May 20, 2022, 8:46 AM IST

ஜிஎஸ்டி கவுன்சில் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும் என்றும், அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு உரிமை கடந்து முடிவெடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது - பழனிவேல் தியாகராஜன்
மாநில அரசு உரிமை கடந்து முடிவெடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது - பழனிவேல் தியாகராஜன்

மதுரை: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மாநில சட்டமன்றங்களை கட்டுப்படுத்தாது என்று நேற்று (மே.19) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கியது. மேலும், கவுன்சிலுக்கு உச்சபட்ச அதிகாரம் கிடையாது என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ஜிஎஸ்டி கவுன்சில் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு நமது சட்ட அமைப்பில் உள்ளவற்றை சுட்டிக் காட்டியுள்ளது. இதில் புதிய அம்சம் எதுவும் கிடையாது. இதில் மாநில சட்டமன்ற உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுவதைத்தான் நாம் கூடுதலாகக் கவனிக்க வேண்டும்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

உச்சநீதிமன்றத்தில் பண மதிப்பிழப்பு, தேர்தல் பத்திரம் உள்ளிட்ட பல வழக்குகள் தற்போது வரை பதில் இல்லாமல் நிலுவையிலேயே உள்ளன. உச்சநீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்புகள் மாநில உரிமைகளை காக்கும் முயற்சிகளை கொண்டாடும் வகையில் உள்ளன. ஜனநாயகத்திற்கும் மக்களுக்குமான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் தீர்ப்புகள் அமைந்துள்ளன.

தற்போதைய ஜிஎஸ்டி குறித்த தீர்ப்பைப் பொறுத்தவரை ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும் முடிவை மாநில அரசுகள் கட்டாயம் கடைப்பிடிக்க தேவையில்லை என கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பேரறிவாளன் குறித்த தீர்ப்பில் ஆளுநர் உட்பட அனைவரின் பணிகள் என்ன என்பது மிக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பேரறிவாளன், ஜிஎஸ்டி கவுன்சில் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சட்டமன்றங்களின் வலிமையை உணர்த்துகிறது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

வரலாற்றில் இல்லாத கட்டமைப்புப் பிழைகளை ஜிஎஸ்டி கவுன்சில் கொண்டிருப்பதாகக் கடந்த ஆண்டே கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முன் வைத்துள்ளோம். பல ஆண்டுகளாகவே மாநில உரிமைகளைக் குறைக்கும் வகையில், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத்தலைவர், ஆளுநரின் செயல்பாடுகள் இருந்தன.

இந்நிலையில் அடுத்தடுத்து வெளியாகியுள்ள இரண்டு தீர்ப்புகளின் மூலம் மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமையை உணர்த்தியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். ஜிஎஸ்டி கவுன்சில் மாநில ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும். அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

மாநில, ஒன்றிய அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது. பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும் ஜிஎஸ்டி குறித்த தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது.

அதன் அடிப்படை செயல்பாடே மிகப் பிழையாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக திரித்துப் பரப்பப்பட்டது. திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து மட்டுமே நான் சட்டமன்றத்தில் பேசினேன்" என்றார்.
இதையும் படிங்க: இலங்கை போல் காட்சியளிக்கும் இந்தியா- ராகுல் காந்தி

Last Updated : May 20, 2022, 8:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.