ETV Bharat / state

ஜாமீன்கோரி நியோமேக்ஸ் நிதி நிறுவன பங்குதாரர்கள் மனு - வழக்கு ஒத்திவைப்பு

author img

By

Published : Jul 17, 2023, 10:49 PM IST

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நிறுவன பங்குதாரர்கள் கைதான நிலையில், சிலர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனு தாக்கல் செய்த வழக்கு 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை
ஜாமின் கோரி நியோமேக்ஸ் நிதி நிறுவன பங்குதாரர்கள் மனு

மதுரை: பிரபல நியோமேக்ஸ் நிதி நிறுவனம் பல கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் பங்குதாரர்கள் பலர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். மதுரையை தலைமையாகக் கொண்டு 'நியோமேக்ஸ்' பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பங்குதாரர்கள் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதன் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் மற்றும் பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, மதுரை பைபாஸ், திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும் இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக தரப்படும் என ஆசை வார்த்தைக் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர்.

இதையும் படிங்க: Vengaivayal Case: சிறுவர்கள் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் - டிஎன்ஏ பரிசோதனைக்கு நீதிமன்றம் அனுமதி!

இதை நம்பி ரூ.10 லட்சம் மூலம் பல கோடி ரூபாய்க்கு முதலீடுகளை பலர் செய்துள்ளனர். ஆனால், கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நியோமேக்ஸ் ப்ராபர்ட்டீஸ் நிறுவன பாலசுப்ரமணியன், கார்லாண்டோ ப்ராப்பர்ட்டீஸ் பழனிசாமி, டிரான்சோ ப்ராப்பரிட்டீஸ் அசோக் மேத்தா, பன்சால் டிரைடாஸ் ப்ராப்பர்ட்டீஸ் சார்லஸ், கிளோமேக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ் தியாகராஜன் மற்றும் இந்நிறுவனங்களின் இயக்குநர்கள் கமலகண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.

இதை போல் மற்றொரு இயக்குநரான பாலசுப்ரமணியன் என்பவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. முதலீடு செய்தவர்கள் தரப்பில் பல்வேறு வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்த நிலையில் மனுவில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதால், மனு மீதான விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் நிறுவன பங்குதாரர்கள் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த வழக்கு விசாரணை 28ஆம் தேதிக்கு ஒத்துவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: Vellore: திடீரென காலில் விழுந்த பெண்.. அதிர்ந்து போன கலெக்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.