ETV Bharat / state

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்...தொடங்கி வைத்த அமைச்சர்கள்

author img

By

Published : Aug 24, 2022, 9:04 AM IST

மதுரையில் வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசையார்ந்த நாட்டிய நாடகத்தை அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மதுரையில் வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசையார்ந்த நாட்டிய நாடகத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
மதுரையில் வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசையார்ந்த நாட்டிய நாடகத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

மதுரை: வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாகக் கொண்ட வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆதரவுடனும், ஹைதர் அலி மற்றும் கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடனும் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப்படையை உருவாக்கி, ஏழு ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றி பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார்.

இதனைத்தொடர்ந்து 1789 ஆம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார். வட இந்தியாவைச் சேர்ந்த ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே, விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி வேலுநாச்சியார். இந்திய விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஈடாக எவரும் இல்லை.

வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசையார்ந்த நாட்டிய நாடகம்
வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசையார்ந்த நாட்டிய நாடகம்

சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 1796 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இந்நிலையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் கலைப்பண்பாட்டுத் துறை மூலம் ஓ.வி.எம். தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் முதலைமச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியாரின் வீர சரித்திரத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இசையார்ந்த நடன நாடகத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மற்றும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசையார்ந்த நாட்டிய நாடகம்
வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசையார்ந்த நாட்டிய நாடகம்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத்சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கேடசன் பூமிநாதன் மற்றும் மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் நாடக கலைஞர்கள் காவிய கதைகள் குறித்தும் வண்ண வண்ண ஒளியில் வசனங்கள் பின்னணியில் உயிரூட்டும் இசையுடன் நடனம் சேர்ந்து செய்த கலவையாய், மறைக்கப்பட்ட சுதந்திர வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படுகிறது வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த இசையார்ந்த நாட்டிய நாடகம் திருச்சியில் 27.08.2022 அன்று தலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 28.08.2022 அன்று இந்துஸ்தான் கல்லூரியிலும், சிவகங்கை மாவட்டத்தில் 30.08.2022 அன்று அரண்மனை வளாகத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வீரமங்கை வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்... முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.