ETV Bharat / state

மதுரை சிறை நூலகத்திற்கு ரூ. 50ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள்.. இனி மதுவுக்கு ‘நோ’.. அசத்தும் 'ஜெயிலர்' ரசிகர்கள்!

author img

By

Published : Jul 31, 2023, 7:23 PM IST

ஜெயிலர் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் இசைக்கருவிகளை ரஜினி ரசிகர் மன்றத்தினர் வழங்கி சிறப்பித்துள்ளனர்.

சிறை நூலகத்திற்கு ரூ 50ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள்
சிறை நூலகத்திற்கு ரூ 50ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள்

சிறை நூலகத்திற்கு ரூ 50ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள்

மதுரை: தமிழ்த் திரைப்பட இயக்குநர் நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படமான ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையில் வெளியாக உள்ளது. ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 'ஜெயிலர்' திரைப்படம் சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் வகையிலான கதை அம்சம் என்பதால் ரசிகர்கள் அதனை வலியுறுத்தும் வகையில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், மதுரை மத்திய சிறையில் உள்ள நூலகத்திற்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 247 புத்தகங்கள் மற்றும் பியானோ இசைக்கருவி மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை சிறைத்துறை அதிகாரி டிஐஜி பழனியிடம் இன்று (ஜூலை 31) வழங்கினர்.

அரசியல், இலக்கியம், ஆன்மிகம், திருக்குறள், சட்டம், வரலாற்றுப் புத்தகங்கள், நாவல்கள், வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள், பகவத் கீதை, குர்ஆன், பைபிள் உள்ளிட்ட மும்மத நூல்கள் ஆகியவற்றை வழங்கினர். புத்தகங்களை வழங்கியதைத் தொடர்ந்து ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் போது நடிகர் ரஜினி மது அருந்தக்கூடாது என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததை நிறைவேற்றும் வகையில், 'இனி ரசிகர்கள் யாரும் மது அருந்தமாட்டோம்' என டிஐஜி பழனி முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழகத்தின் செடி புட்டா சேலை, நாமக்கட்டி, மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் அங்கீகாரம்!

புத்தகங்கள் வழங்கிய ரஜினி ரசிகர் மன்றத்தினருக்கு சிறைத்துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி பால தம்புராஜ், ''சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் வகையில் புத்தகங்களை வழங்கியுள்ளோம். மேலும் டிஐஜி முன்பாக இனி மது அருந்தமாட்டோம் என உறுதி ஏற்றுள்ளோம்'' என்றார்.

சிறைத்துறை டிஐஜி பழனி இது குறித்து கூறும்போது, ''ரஜினி ரசிகர்களின் இந்த முயற்சி பாராட்டுக்கு உரியது'' என்றார்.

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், மதுரையில் உள்ள ரஜினி ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து மதுரை மத்திய சிறைச்சாலை நூலகத்திற்கு நூல்கள் மட்டுமின்றி இசைக்கருவிகளும் வழங்கி அசத்தியுள்ளனர். மேலும் ரஜினி வேண்டுகோளை ஏற்று தாங்கள் இனிமேல் மதுப் பழக்கத்தை தொடர்வதில்லை என்ற உறுதி மொழியையும் ஏற்றுள்ளது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: "குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை"... ரஜினியின் குட்டிக் கதை யாருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.