ETV Bharat / state

மதுரையில் மார்ச் 26, 27-ம் தேதி வைகை இலக்கியத் திருவிழா!

author img

By

Published : Mar 18, 2023, 7:11 AM IST

Updated : Mar 18, 2023, 8:01 AM IST

மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் மதுரை தமிழ்ச் சங்கத்தில் வைகை இலக்கிய திருவிழா நடைபெற உள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார்

Madurai MP Su Venkatesan said about Vaigai Literature Festival to be held in Madurai
மதுரையில் நடைபெறவுள்ள வைகை இலக்கியத் திருவிழா குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்

மதுரையில் நடைபெறவுள்ள வைகை இலக்கியத் திருவிழா குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் 5 நகரங்களில் இலக்கியத் திருவிழா நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அந்தவகையில், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, சென்னை ஆகிய நகரங்களை அடுத்து 5வது நகரமாக மதுரையில் வைகை இலக்கியத் திருவிழா நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் முன்னிலையில் நடந்த நிகழ்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 26, 27 ஆகிய தேதிகளில் "வைகை இலக்கியத் திருவிழா" நடத்தப்பட உள்ளதாகச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 4 பெருநகரங்களில் வைகை. காவேரி, பொருநை மற்றும் சிறுவாணி இலக்கியத் திருவிழாக்களும், சென்னை பெருநகரில் சென்னைப் இலக்கியத் திருவிழா மொத்தம் 5 இலக்கியத் திருவிழாக்கள் நடத்த வேண்டுமென்று அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, காவேரி, பொருநை, சிறுவாணி மற்றும் சென்னை இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. 5-வது இலக்கியத் திருவிழாவாக "வைகை இலக்கியத் திருவிழா" வருகின்ற 26.03.2023 மற்றும் 27.03.2023 ஆகிய தேதிகளில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 3 அமர்வுகளாக நடைபெற உள்ளது.

இந்த வைகை இலக்கியத் திருவிழாவில் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மிக முக்கியமான படைப்பு ஆளுமைகள். இலக்கிய ஆளுமைகள் பங்குபெற உள்ளனர். தமிழ் இலக்கியத்தின் பழமைக்கும், மரபுக்கும் முக்கியமான அடையாளமாக இருப்பது வைகையும், மதுரையும் ஆகும்.

மதுரை இலக்கியத் திருவிழா மிகச் சிறப்பான திருவிழாவாக அமையும் என்றும், அதற்கான திட்டமிடுதல் மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் நூலகத்துறையினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள். மாணவர்கள், இலக்கிய நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் வைகை இலக்கியத் திருவிழாவில் பங்கெடுத்து முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வைகை இலக்கியத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் பங்குபெற உள்ளனர். இவர்கள் அனைவரும் மொழி, இலக்கியம், மதுரை, மதுரையின் எழுத்துக்களைச் சார்ந்து உரையாற்ற உள்ளனர். மேலும், அனைத்து தரப்பட்ட ஆய்வாளர்கள் மற்றும் ஆளுமைகள் வைகை இலக்கியத் திருவிழாவில் பங்குபெற உள்ளனர்” என தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது கூடுதல் ஆட்சியர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்ஷு நிகம், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ‘நாளை விரிவாக பேசுகிறேன்’ - ஓபிஎஸ்

Last Updated : Mar 18, 2023, 8:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.