ETV Bharat / state

போக்குவரத்து காவலராக இடமாற்றம் செய்யும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

author img

By

Published : Nov 30, 2022, 7:18 AM IST

கர்மா விதியின் படி மதுரையில் போக்குவரத்து காவலராக இடமாற்றம் செய்யும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, காவலரை திண்டுக்கல்லுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து காவலராக இடமாற்றம் செய்யும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
போக்குவரத்து காவலராக இடமாற்றம் செய்யும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: அவனியாபுரத்தில் ரைட்டராக பணியாற்றியவர் ஸ்ரீமுருகன். இவரை நிர்வாகக் காரணங்களுக்காக தூத்துக்குடிக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, பிராராப்த கர்மாப்படி, மனுதாரரை மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து காவலராக மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து காவல்துறை மற்றும் ஸ்ரீமுருகன் தரப்பிலும் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் விசாரித்தனர். அரசுத் தரப்பில், மனுதாரரை திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்பட்டது.

மனுதாரர் தரப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் இடமாற்றம் செய்வதை ஏற்பதாக கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், கர்மா படி மதுரையில் போக்குவரத்து காவலராக இடமாற்றம் செய்யும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ஸ்ரீமுருகனை திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றுவது தொடர்பாக 2 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: உதயநிதியை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டியிட்டால் ஆதரிப்போம்- சீமான் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.