ETV Bharat / state

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வீரர்களுக்கான முன்பதிவு ஆரம்பம்!

author img

By

Published : Jan 10, 2020, 1:08 PM IST

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான அனுமதிசீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வருகை தந்தனர். இவர்கள் நள்ளிரவு முதலே தேர்வு நடைபெறும் இடத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

போட்டியில் பங்கேற்கும் 700 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய 8 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்பதிவு ஆரம்பம்

இதையடுத்து, மாடுபிடி வீரர்களின் உயரத்திற்கு ஏற்ப எடை இருப்பதை கண்டறியும் BMI சோதனை, இதயத்துடிப்பு, கொழுப்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் பரிசோதனைகள் நடைபெற்றது. குறிப்பாக போட்டியாளர்கள் எடை 70 கிலோவிற்கு குறைவாகவும், வயது வரம்பு 21 முதல் 40 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாநகர பயணிகளுக்கு குறைந்த செலவில் குளுகுளு பயணம்!

Intro:*அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான அனுமதிசீட்டு வழங்கும் பணி தொடக்கம்*Body:*அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான அனுமதிசீட்டு வழங்கும் பணி தொடக்கம்*


மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான அனுமதிசீட்டு வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நள்ளிரவு முதலே தேர்வு நடைபெறும் இடத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 700 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 8 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டனர். இதனையடுத்து டோக்கன் வழங்கப்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் மாடுபிடி வீரர்களின் உயரத்திற்கு ஏற்ப எடை இருப்பதை கண்டறியும் BMI சோதனை மற்றும் இதயதுடிப்பு , கொழுப்புசத்து உள்ளிட்டவைகள் குறித்து சோதனை செய்யப்பட்டது. மேலும் 70கிலோவிற்கு குறைவாக எடை இருக்க வேண்டும், 21வயது முதல் 40வயது வரை வயது வரம்பும் நியமிக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.