ETV Bharat / state

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஜும்பா நடனம்!

author img

By

Published : Nov 14, 2019, 1:57 PM IST

மதுரை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகள் ஜும்பா நடனம் ஆடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குழந்தைகளின் ஜூம்பா நடனம்

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் இந்திரா அறக்கட்டனை என்ற அமைப்பின் மூலமாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளோடு இன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், குழந்தைகள் ஆடிய ஜும்பா நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

குழந்தைகளின் ஜூம்பா நடனம்

இது குறித்து இந்திரா அறக்கட்டளையின் இணை இயக்குநர் ஜெயஸ்ரீ கூறுகையில், “ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இதுபோன்ற ஜும்பா நடனத்தின் மூலமாக அவர்களது உடலும் உள்ளமும் மேம்படும். இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் நடனமாடினர்.

இந்திரா டிரஸ்டின் இணை இயக்குனர் ஜெயஸ்ரீ

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் கற்றல் திறனையும் விளையாட்டுத் திறனையும் மேம்படுத்துவதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியமாகின்றன. அந்த அடிப்படையில்தான் இந்த ஜும்பா நடனத்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தைகளுக்கு வழங்குகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...’நவீன இந்தியாவின் ஆகச்சிறந்த சிற்பி நேரு!' - ராகுல் புகழாரம்

Intro:ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஜூம்பா நடனம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆட்டிக்குறைபாடுடைய குழந்தைகள் ஜூம்பா நடனம் ஆடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.Body:ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஜூம்பா நடனம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆட்டிக்குறைபாடுடைய குழந்தைகள் ஜூம்பா நடனம் ஆடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் இந்திரா டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகளோடு இன்று குழந்தைகள் தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த குழந்தைகள் ஆடிய ஜூம்பா நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுகுறித்து இந்திரா டிரஸ்டின் இணை இயக்குனர் ஜெயஸ்ரீ கூறுகையில், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இதுபோன்ற ஜூம்பா நடனத்தின் மூலமாக அவர்களது உடலும் உள்ளமும் ஆரோக்கியமும் மேம்படும். இன்று இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டு குழந்தைகள் தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

வழக்கமான குழந்தைகளோடுஇவர்களின் கற்றல் திறனையும் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியமாகின்றன. அந்த அடிப்படையில்தான் இந்த ஜும்பா நடனத்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைகளுக்கு நாங்கள் வழங்குகிறோம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.