ETV Bharat / state

அலங்காநல்லூர் பேரூராட்சியில் கணவன், மனைவி வெற்றி

author img

By

Published : Feb 22, 2022, 9:50 PM IST

அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பில் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட்ட கணவன், மனைவி இருவரும் வெற்றியடைந்துள்ள சம்பவம் திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலங்காநல்லூர் பேரூராட்சியில் கணவன், மனைவி இருவரும் வெற்றி
அலங்காநல்லூர் பேரூராட்சியில் கணவன், மனைவி இருவரும் வெற்றி

மதுரை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 22) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தின் மூன்று நகராட்சிகள், ஒன்பது பேரூராட்சிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் அலங்காநல்லூர் பேரூராட்சியின் இரண்டு தனித்தனி வார்டுகளில் திமுக சார்பில் கணவன், மனைவி இருவரும் போட்டியிட்டிருந்தனர்.

அதன்படி 5ஆவது வார்டில் போட்டியிட்ட கோவிந்தராஜ், 4ஆவது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி ரேணுகா ஈஸ்வரி ஆகிய இருவரும் வெற்றிபெற்றதாகத் தேர்தல் அலுவலர்களால் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் போட்டியிட்ட கணவன், மனைவி இருவரும் வெற்றிபெற்ற சம்பவம் திமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் 12 இடங்களைக் கைப்பற்றிய திமுக கூட்டணி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.