ETV Bharat / state

உணவு பாதுகாப்பு அலுவலர் நியமனத்தில் சித்த மருத்துவம் படித்தவருக்கும் தகுதி உள்ளது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

author img

By

Published : Apr 7, 2023, 7:39 PM IST

உணவு பாதுகாப்பு அலுவலர் நியமன தொடர்பாக வெளியிட்ட தேர்வாளர்கள்பட்டியலை ரத்து செய்து மீண்டும் சித்தா மருத்துவ மனுதார்களை இணைத்து புதிய தேர்வு பட்டியலை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சித்த மருத்துவம் படித்த மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் அலுவலர்கள் நியமனம் செய்வது தொடர்பாக சென்னை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) வெளியிட்டது. மனுதாரர்கள் சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள் மனுதாரர்கள் அளித்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு எழுத்துத் தேர்வை எழுதினர். ஆனால், வாரியம் வெளியிட்டுள்ள தேர்வுப் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இல்லை. சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்களைக் கருத்தில் கொள்ளவில்லை எனவே உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட தேர்வுபட்டியலை ரத்து செய்து புதிய தேர்வு பட்டியலை வெளியிடக் வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், "சித்த மருத்துவத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தனிச்சிறப்பு உண்டு சித்த மருத்துவம் தமிழ்நாடு கலாச்சாரத்தில் ஒன்றியவை மென்மேலும் பல்வேறு கோயில்களில் முன்னால் சித்த மருத்துவ முகாம் செயல்பட்டு வரும் தற்பொழுது அது செயல்படுகிறதா என்பது தெரியவில்லை, பல்வேறு நெருக்கடியான காலங்களில் சித்த மருத்துவர்கள் ஆற்றிய பங்கு நாம் மறந்து விட முடியாது கொரோனா தொற்று காலத்தில் கபசுர குடிநீர் அதே போல் டெங்கு காய்ச்சல் பரவிய போது நிலவேம்பு கசாயம் ஆகியவைகள் தமிழ்நாடு அரசு முன்னெடுத்தது.

மேலும் சித்த மருத்துவக் கல்லூரிகளை அரசு நடத்தி வருகிறது அவர்களுக்கான உரிய அங்கீகாரம் என்பது கிடைக்கப்பெற்று இருக்கிறது. மேலும் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பாடத்திட்டங்கள் மற்றும் நவீன முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது காலத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மருத்துவம் பல் மருத்துவம் சித்த மருத்துவம் அறியபட்டத்திற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எனவே அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் துறையில் இருந்து வழங்கப்படும் சித்த மருத்துவ சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது.

தேர்வு முறையில் சித்த மருத்துவ பட்டம் பெற்றவர்களை தகுதி நீக்கம் செய்வதுள்ளார்கள் இது ஏற்கக்கூடியது இல்லை, இந்த ஒரு சிறந்த அமைப்புகளும் நடைமுறையில் இருப்பது அதனை பயிற்சி செய்பவர்களின் கையில் தான் இருக்கிறது தமிழகத்தில் சித்த மருத்துவம் நடைமுறையில் இருக்கிறதா என தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்த முறைகள் பழமையானது மற்றும் காலாவதியானது என நாம் நிராகரிப்போம் ஆனால் இங்கு எதுவும் பழமையானதும் அல்ல புதுமையானதும் அல்ல, நடைமுறை செயல்பாடுகளை பொறுத்தது மருந்து என்பது சித்த மருத்துவத்தை உள்ளடக்கியது என நான் நம்புகிறேன் மேலும் இந்திய மற்றும் தமிழ்நாடு சித்த மருத்துவங்கள் பல்வேறு விதமான நோய்களுக்கு தீர்வளித்திருக்கிறது, மேலும் அலோபதி முறையில் எல்லா மருத்துவ கேள்விக்கும் பதிலும் இல்லை எனவே மனுதாரர்கள் "உணவு பாதுகாப்பு அலுவலர் " பதவிக்கு பரிசீலிக்க உரிமை உண்டு என்று நான் கருதுகிறேன். உணவு பாதுகாப்பு அலுவலர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்து மீண்டும் மனுதாரர் இணைத்து பரிசீலனை செய்து புதிய தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவிட்டு வழக்கின் முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: ஜாதி சான்றுக்கு ரூ.300 லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு ஓராண்டு ஆண்டு சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.