ETV Bharat / state

ஜெ.பி. நட்டாவுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு

author img

By

Published : Jan 30, 2021, 4:38 PM IST

மதுரை: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அவர் குறிப்பிட்டார்.

health minister vijayabaskar meets Jb nadda
health minister vijayabaskar meets Jb nadda

மதுரை சிந்தாமணி பகுதியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை அவர் தங்கியுள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜன. 30) சந்தித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்துப் பேசுகையில், "இன்று காலை டி. குன்னத்தூர் பகுதியில் ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வேலம்மாள் தங்கும் விடுதியில் தங்கி இருந்தேன்.

மதுரைக்குத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை, முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் என்ற அடிப்படையிலும், நான் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் என்பதாலும் குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரைக்கு அனுமதி வழங்கும்போது ஜெ.பி. நட்டா மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் என்றதன் அடிப்படையிலும் அவரைச் சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியல் ரீதியானது அல்ல" என்றார்.

ஜெபி. நட்டாவுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு

இதையும் படிங்க...'சசிகலாவும், அமமுகவும் அதிமுகவில் இணைவதற்கு 100% வாய்ப்பு இல்லை!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.