ETV Bharat / state

குட்கா வழக்கில் கைதானவர்கள் நலத்திட்ட உதவிகளுக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் - நீதிமன்றம்

author img

By

Published : Dec 21, 2022, 2:05 PM IST

குட்கா வழக்கில் கைதானவர்கள் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு நலத்திட்ட உதவியாக 2 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

குட்கா வழக்கில் கைதானவர்கள் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
குட்கா வழக்கில் கைதானவர்கள் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சண்முக சுந்தர், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடமிருந்து சுமார் ரூ.80,000 மதிப்புள்ள குட்கா பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் நெல்லையைச் சேர்ந்த சிவகுமார் என்பவரிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, நவம்பர் 30ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். எனவே இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று (டிச.21) உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், ‘தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதிட்டார்.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில், ‘நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் மனுதாரர்கள் கட்டுப்படுவார்கள். எனவே வழக்கில் இருந்து ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, “சண்முக சுந்தர் ரூ.50,000 மற்றும் சிவக்குமார் ஒன்றரை லட்சம் ரூபாயை திருநெல்வேலி மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு நலத்திட்ட உதவித் தொகையாக வழங்க வேண்டும்” என கூறி நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 300 கிலோ ஹெராயின் கடத்தல் வழக்கு: NIA சிறப்பு நீதிமன்றத்தில் 9 இலங்கைத் தமிழர்கள் ஆஜர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.