ETV Bharat / state

தாலிக்குத் தங்கம் திட்டம்: சென்ற ஆட்சியில் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை - அமைச்சர் கீதாஜீவன்

author img

By

Published : Oct 23, 2021, 5:46 PM IST

தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு சென்ற அதிமுக சார்பில் முறையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கீதாஜீவன்
தமிழ்நாடு சமூக நலத்துறை

மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மகளிருக்கான மாநிலக் கொள்கை உருவாக்கம் தொடர்பாக மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் அத்துறையின் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர், சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கிராமப்புற பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பின், செய்தியாளர்களை சந்தித்த சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு மாறவேண்டும் என்று முதலமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் முறையாக ஆய்வு செய்யப்படுகின்றன. குழந்தைகள் நல குழுவினர் மீது ஏதேனும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தாலிக்குத் தங்கம் திட்டம் - 8 கிராம்

திருமண நிதியுதவி, கடந்த ஆட்சிக் காலத்தில் 4 கிராம் தங்கத்திற்கு பதிலாக 8 கிராம் என அறிவித்தார்கள். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, நிதி ஒதுக்கீடு அதிகரிக்கவும் இல்லை. 2019 மார்ச் வரை நிலுவையில் இருந்த 20,000 க்கும் அதிகமானோருக்கு திருமண உதவித்தொகை, முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் வழங்கப்பட்டு உள்ளது.

நடந்த மகளிருக்கான மாநிலக் கொள்கை உருவாக்குத்திற்கான மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில் அத்துறையின் அமைச்சர் கீதாஜீவன் தலைமையேற்று பேசினார்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில்

கூடுதலாக 762 கோடி நிதி ஒதுக்கீடு

2019 மார்ச் மாதத்திற்கு பின் அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள், நிலுவையில் உள்ளன. மு.க. ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன் சென்ற ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று 762 கோடி ரூபாய் கூடுதலாக சமூக நலத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருமண போட்டோக்கள் கட்டாயம்

திருமண உதவித் தொகையை பொறுத்தவரையில், தற்போது நடைபெற்று வரும் திருமணங்கள் அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். திருமண நிகழ்வுகள் முழுவதும் போட்டோ எடுக்கப்பட வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தைத் திருமணங்கள்

கடந்த ஆட்சியில் நடைபெற்ற குழந்தை திருமணங்கள் முறையாக காவல்துறையில் எப்ஐஆர் போடப்படவில்லை. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. சென்றாண்டு சட்டப்படி, எந்த ஒரு நடவடிக்கையும் இதற்காக எடுக்கப்படவில்லை; திமுக ஆட்சியில் சிறப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தை திருமணங்கள் குறித்து, எவ்வித புகார்கள் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் குழந்தைத் திருமணங்கள் முழுவதும் சமரசம் பேசி முடிக்கப்பட்டு உள்ளன. அதனால் தான் எப்.ஐ.ஆர் போடப்படாமல் இருந்துள்ளது"என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப. வீரபாண்டியன் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.