ETV Bharat / state

"தமிழக கோயில்களின் சொத்துக்கள் திருடப்படுகின்றன" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 8:43 PM IST

தமிழகத்தில் உள்ள கோயில்களின் சொத்துக்கள் திருடப்படுவதாகவும், திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகிறது எனத் தெரியவில்லை என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

finance Minister Nirmala Sitharaman has said that properties of Tamil Nadu temples are being stolen
தமிழக கோயில்களின் சொத்துக்கள் திருடப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

தமிழக கோயில்களின் சொத்துக்கள் திருடப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

மதுரை: உலக மரபு வார விழாவை முன்னிட்டு மதுரை தியாகராஜர் கல்லூரியில் அமைக்கப்பட்ட தென் தமிழக குடைவரை கோயில்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது. தமிழக பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் போது, அரசியல் நுழைகிறது. பாரம்பரியம் இது அல்ல, அது என பல சர்ச்சைகள் வருகின்றன.

ஜனநாயக நாட்டில் சர்ச்சைகள் வரலாம். எல்லோரும் எல்லாம் பேசலாம். தமிழகத்தின் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக வடிவமைத்து உள்ளனர். ஆனால், அமைச்சர் வருகிறார் என பாரம்பரிய இடங்களில் வெள்ளை அடித்து விடுகிறார்கள். வெள்ளை அடிக்கப்பட்டதற்கு பின்னால் உள்ள சரித்திரம் யாருக்கும் தெரிவதில்லை.

தமிழ் இலக்கியங்களுக்கும், குடைவரை கோயில்களுக்கும் தொடர்புகள் உள்ளன. குடைவரை கோயில்களில் உள்ள எழுத்துகளுக்கும் தமிழ் மொழி, ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றிக்கும் தொடர்பு உள்ளது. நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம் தான். அதனை நாம் பாதுகாக்க வேண்டும்.

மாணவர்கள் டாக்டர், இஞ்ஜினியர் என எது வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் நம்முடைய தமிழ் மரபுகளை அறிந்து பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் சொத்துக்களை திருடி வருகிறார்கள். கோயில்களில் திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகிறது என தெரியவில்லை.

இதையும் படிங்க: 6 எம்.பி.பி.எஸ், 122 பி.டி.எஸ் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளது... மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவிப்பு!

நம் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இந்துக்கள் எவ்வாறு கோயில்களை கட்டியுள்ளனர் என்பதைக் காட்சிப்படுத்துகின்றனர். தமிழக குடைவரைக் கோயில்கள் கடினமான பாறைகளால் குடைந்து உருவாக்கப்பட்டவை. கடினமான உழைப்புடன் உருவாக்கப்பட்டவை.

மேலும், தனிப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தகுதியான பாறைகள் தேர்வு செய்து, அதன் பகுதியையும் தீர்மானித்து, பாதியிலேயே விடப்பட்ட சில கோயில்களும் உள்ளன. பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட 100இல் 70க்கும் மேற்பட்ட கோயில்கள், காவிரிக்கு தென் பகுதியில் உள்ளன. 200 - 250 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளுக்கு ஒரு கோயில் என கோயில் கட்டும் கலையை ஒரு இயக்கமாகவே செய்துள்ளனர்" என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.