ETV Bharat / state

6 எம்.பி.பி.எஸ், 122 பி.டி.எஸ் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளது... மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 7:00 PM IST

Updated : Nov 20, 2023, 9:26 PM IST

Tamil Nadu Medical Admission Board: தமிழ்நாட்டில் உள்ள பல் மருத்துவக்கல்லூரியில் 122 இடங்களும், எம்.பி.பி.எஸ் தனியார் மருத்துவக்கல்லூரியில் 6 இடங்கள் என மொத்தம் 128 இடங்களில் நடப்பாண்டில் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

TN Medical Admission Board Notification that MBBS BDS are vacant without admission
6 எம்.பி.பி.எஸ், 122 பி.டி.எஸ் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளது... மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல் மருத்துவக்கல்லூரியில் 122 இடங்களும், எம்.பி.பி.எஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில் 6 இடங்கள் என 128 இடங்களில் நடப்பாண்டில் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

பல் மருத்துவப் படிப்பில் 2017-18ஆம் ஆண்டில் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 804 இடங்கள் காலியாகவும், 2018-19ஆம் ஆண்டில் 677 இடங்களும், 2019-20ஆம் ஆண்டில் 705 இடங்களும், 2020-21ஆம் ஆண்டில் 637 இடங்களும், 2021-22ஆம் ஆண்டில் 570 இடங்களும், 2022-23ஆம் ஆண்டில் 557 இடங்களும் காலியாக இருந்தன.

ஆனால் 2023-24 நடப்பாண்டில் 1,950 மாணவர்கள் பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டதில் 1,828 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 122 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2023-24ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, சுயநிதி, தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் 105 கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 14 என 600 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது.

அதில், தமிழ்நாடு அரசின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 8316 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 2032 இடங்களும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்பட அனுமதிக்கப்பட்டது.எம்பிபிஎஸ் படிப்பிற்கான 4 சுற்றுக் கலந்தாய்வு முடிந்த பின்னர் அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக இல்லை.

நிர்வாக ஒதுக்கீட்டில் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 14 இடங்களும், தனியார் பல்கலைக் கழகங்களில் 4 இடங்களும் என 18 இடங்கள் காலியாக இருந்தன. இந்த நிலையில், தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு, எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான 4 சுற்றுக் கலந்தாய்வு முடிந்து, அவர்கள் சேர்வதற்கான காலக் கெடு அக்டோபர் 3ஆம் தேதி என மத்திய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனவே அவர்கள் அனுமதி தரும் வரையில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க முடியாது என அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், அக்டோபர் 13ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுமதி வழங்க வேண்டும் எனக் கடிதம் எழுதி இருந்தார். மேலும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் எம்பிபிஎஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்பிக் கொள்வதற்கு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுவின் செயலாளர் அருணலதா சிறப்பு ஸ்டே வேகன்சி கலந்தாய்வினை அறிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ் படிப்பில் 18 மருத்துவ இடங்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடமும், 11 தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் 136 இடங்களுக்கும் மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில் 7 முதல் 9ஆம் தேதி வரையில் விரும்பும் கல்லூரிகளை மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, 10ஆம் தேதி மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 15ஆம் தேதி வரையில் மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர்.

இந்த நிலையில், எம்பிபிஎஸ் படிப்பில் 6 இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 122 இடங்களும் எனவும், 128 இடங்கள் நடப்பாண்டில் காலியாக உள்ளது எனத் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் புதிதாக 11 நர்சிங் கல்லூரிகள்.. கட்டமைப்பு பணிகள் முடிந்ததும் மாணவர் சேர்க்கை" - அமைச்சர் மா.சு!

Last Updated : Nov 20, 2023, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.