ETV Bharat / state

கீழடி 7ஆம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு!

author img

By

Published : Apr 9, 2021, 5:15 PM IST

மதுரை: கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 7 ஆம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியாக கொந்தகை அகழாய்வுத்தளத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியில் நடத்தப்பட்ட 7ஆம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது
கீழடியில் நடத்தப்பட்ட 7ஆம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கீழடியில் தொல்லியல் துறையின் சார்பாக ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது நான்கு முதுமக்கள் தாழி, ஐந்து மனித எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் பயன்பாட்டு பொருள்களான மண் குவளைகள், கலயங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இந்த மூன்று அகழாய்வு களங்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், பத்து தொல்லியல் அலுவலர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கீழடியில் நடத்தப்பட்ட 7ஆம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன

ஐந்துக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அவற்றில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என இணை இயக்குனர் பாஸ்கரன் தெரிவித்தார். தற்போது மேலும் குழிகள் தோண்டப்படுவதற்கான அளவீடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கரோனா பாதிப்பாளர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை- ஹர்ஷ் வர்தன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.