ETV Bharat / state

நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் - துணைப் பொது மேலாளர் உள்பட 4 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

author img

By

Published : Dec 13, 2021, 6:22 AM IST

நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒப்புதல் வழங்கி,அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய துணைப் பொது மேலாளர் உள்பட நான்கு பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிபிஐ
சிபிஐ

மதுரை: கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மதுரை - ராமேஸ்வரம் NH49 சாலை மற்றும் தஞ்சை - புதுக்கோட்டை NH229 சாலை பணிகளின் போது ஒப்பந்ததாரர்களிடமிருந்து முறையான ஆவணங்களை பெறாமல் ஐந்து விழுக்காடு கமிஷன் பெற்று பணிக்கான ஒப்புதல் வழங்கி அதற்கான தொகையை வழங்கியுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய துணைப் பொது மேலாளர் முத்துடையார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

பதவியை தவறாகப் பயன்படுத்தி மோசடி ஆவணங்களின் மூலம் அரசுக்கு 1 கோடியே 38 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் முத்துடையார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் கமிஷன் கொடுத்து ஒப்பந்த பணிகளை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனங்களான தெலங்கானாவைச் சேர்ந்த KNR கன்ஸ்ட்ரக்சன், சென்னையை சேர்ந்த காயத்ரி எஸ்பிஎல் ஆகிய இரு நிறுவனங்களை சேர்ந்த நான்கு பேர் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக துணைப் பொதுமேலாளர் முத்துடையாரிடம் சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Besant nagar beach: ஒரே நாளில் 75 டன் திடக்கழிவுகள் அகற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.