ETV Bharat / state

மதுரையில் சர்ச்சைக்குரிய வகையில் பேனர்: அமைதியாக நடந்துமுடிந்த வாக்குப்பதிவு

author img

By

Published : Dec 27, 2019, 10:55 PM IST

மதுரை: மேலூர் கிராமத்தில் அதிமுக, திமுக, பாஜக மற்றும் விசிகவை உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணிப்போம் எனவும் இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை ஆதரிப்போம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேனர் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரையில் சர்ச்சைக்குரிய வகையில் பேனர்
மதுரையில் சர்ச்சைக்குரிய வகையில் பேனர்

மதுரை: மேலூர் கிராமத்தில் அதிமுக, திமுக, பாஜக, விசிகவை உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணிப்போம் எனவும் இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை ஆதரிப்போம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேனர் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் 1997 ஜூன் 30ஆம் தேதி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நன்னடத்தை அடிப்படையில் மீதமுள்ள 13 பேரும் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. தொடர்ந்து, இதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் முன்னிலையாக வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

மதுரையில் சர்ச்சைக்குரிய வகையில் பேனர்

இதனிடையே மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த மேலவளவு பகுதியில் அதிமுக, திமுக, பாஜக, விசிக கட்சிகளுக்கு வாக்கு இல்லை என்றும், பட்டியலின மக்களுக்கு ஆதரவாக உள்ள இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்குத்தான் தங்கள் வாக்கு என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேனர் வைத்துள்ளனர். மேலவளவு கிராமத்தில் உள்ள ஐந்து வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக இருந்தும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்த வெங்கடதார அள்ளி மக்கள்!

Intro:*அதிமுக, திமுக, பாஜக மற்றும் விசிக வை உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணிக்கும் மேலவளவு மக்கள் - ஆதரவாக குரல் கொடுத்த இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்குத்தான் எங்கள் ஓட்டு..!! என்று சர்ச்சைக்குரிய பிளக்ஸ் பேனர்*Body:*அதிமுக, திமுக, பாஜக மற்றும் விசிக வை உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணிக்கும் மேலவளவு மக்கள் - ஆதரவாக குரல் கொடுத்த இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்குத்தான் எங்கள் ஓட்டு..!! என்று சர்ச்சைக்குரிய பிளக்ஸ் பேனர்*

மதுரை மாவட்டம், மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் 1997ல் ஜூன் 30ந் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். சாதிய வெறியுடன் பட்டப்பகலில் நடத்தப்பட்ட கொடூரமான கொலையாகும் இது. இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 4 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதாக கூறி மீதமுள்ள 13 பேரும் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொடூரமான சாதிவெறி அடிப்படையிலான படுகொலையில் தண்டிக்கப்பட்ட 13 பேரை தமிழக அரசு சர்வசாதாரணமாக விடுவித்திருப்பது அதிர்ச்சியளித்ததாகவும்,

இவர்களது விடுதலையை ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொண்டதன் விளைவாக மதுரை, மேலூர் மேலவளவு பகுதியில் அதிமுக, திமுக,பாஜக, விசிக கட்சிகளுக்கு இல்லை எங்கள் ஓட்டு இல்லை என்றும்.,

ஆதரவாக குரல் கொடுத்த இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்குத்தான் எங்கள் ஓட்டு..!! என்று தற்போது சர்ச்சைக்குரிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்ப்பட்ட மேலவளவு கிராம மத்தியில் இதுபோன்ற சர்ச்சைகுரிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலவளவு கிராமத்தில் உள்ள 5 வாக்கு சாவடிகளும் பதற்றமான வாக்கு சாவடிகளாக இருந்துவரும் நிலையில் தற்போது வரையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.