ETV Bharat / state

மதுரையில் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி

author img

By

Published : Apr 22, 2022, 8:06 AM IST

மதுரை - பழங்காநத்தம் நேரு நகரில் கழிவுநீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க சென்ற ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தனர்.

மதுரையில் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த  3 தொழிலாளர்கள் பலி
மதுரையில் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த 3 தொழிலாளர்கள் பலி

மதுரை - பழங்காநத்தம் நேரு நகரில் கழிவுநீர் தொட்டிக்குள் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பழுத பார்க்க ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் சென்றுள்ளனர். அப்போது கழிவு நீர் தொட்டிக்குள் சிவக்குமார் என்பவர் தவறி விழுந்ததாக தெரிகிறது.

அவரை காப்பாற்ற லட்சுமணன், சரவணன் ஆகிய இருவர் சென்றுள்ளனர். ஆனால் விஷ வாயு தாக்கியதில் 3 பேரும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.